பாதிக்கப்பட்ட முஹம்மது றினோசுக்கு உதவுவீர்களா..?
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா ஜாயா வீதி,மாஞ்சோலை கிண்ணியா-03 எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட மாஞ்சோலை ஜூம்ஆ பள்ளிக்குட்பட்ட மகல்லாவாசியான மொஹமட் நவாஸ் முஹம்மது றினோஸ் வயது(27) இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு பல மாத காலமாக வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.அன்றாடம் உழைத்து வாழும் திருமணமான இந்த இளைஞனின் ஒரு அன்பு மிக்க வேண்டுகோள் உங்கள் யாவருக்கும் உதவி புரியும் என்ற நோக்கிலேயே இப்பதிவு இடம்பெறுகிறதாகவும் இந்த இளைஞன் உதவும் கரங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளது இதனை சீர் செய்வதாக இருந்தால் தனது தாயின் சிறு நீரகத்தை மகனுக்கு மாற்றுவதற்கு பல இலட்சம் பணம் தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த பணத் தொகையை தம்மால் ஈடு செய்யமுடியாதுள்ளதாகவும் அவர்களது குடும்பம் தெரிவிக்கின்றன.நல் உள்ளம் படைத்த எம் சகோதர சகோதரிகள் தனக்கான பண உதவியினை தங்களால் இயன்றளவு உதவுமாறு ஒரு இளைஞனாக உங்களிடம் உதவி கோருகிறார்.
"எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாறோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அல்குர்ஆன் 5:32)
இந்த இளைஞனின் சிறு நீரக நோயினை குணப்படுத்த தங்களது துஆவிலும் சேர்த்துக் கொள்ளுமாறும்.உதவிகளை வழங்குவோர் பின்வரும் கணக்கு இலக்கத்துக்கு வைப்பிலிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்.உயிருக்காக போராடும் இந்த இளைஞனுக்கு உதவ முன்வாருங்கள் இறைவன் தங்களது சொத்து செவங்களையும் உடல் நலத்தையும் மேலும் ஆரோக்கியமானதாகவும் ஆக்குவானாக
ஆமீன்..
இத்துடன் வைத்திய அறிக்கைகள் உட்பட உறுதிப்படுத்தப்பட்ட ஏனைய தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன.
தகப்பனின் வங்கி கணக்கு இலக்கம்
M.A.MOHAMED NAWAS
Bank Of Ceylon -இலங்கை வங்கி(BOC)
A/C 72027853
ALANKERNY BRANCH
தொலைபேசி இல:0756231228
Post a Comment