பிரதமர் பதவிக்கு இம்தியாஸை நியமியுங்கள் - ரணில் முன், சுஜீவ துணிகரப் பேச்சு
2020ல் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கிவிட்டு, பிரதம மந்திரி பதவியை முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காரை அமா்த்துவதற்கு இராஜாங்க அமைச்சா் சுஜிவ சேரசிங்க அரைகூவல் விடுத்து உரையாற்றினாா்.
கெவலக் டவுனில் ரோசி சேனாநாயக்காவை கொழும்பு மேயராக்குவதற்காக நடைபெற்ற ஜ.தே.கட்சி கொழும்பு கிழக்கு கூட்டத்திலேயே இராஜாங்க அமைச்சா் சுஜிவ மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
இந்நிகழ்வில் ரோசி சேனாநயாக்காவினை ஆதரித்து, முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கிர் மாக்காா், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, இரான் விக்கிரம, சாகல ரத்னாயக்கா, மற்றும் கபினட் அமைச்சா்கள் சமுகமளித்திருந்தனா்.
இச்சா்ந்தப்பத்திலேயே இம்தியாஸ் பாக்கீா் மாக்காரை பாா்த்து,
நீங்கள் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும். கபிணட் அமைச்சராகி 2020 ல் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு தற்பொழுது சிறந்த காலம் வந்துள்ளது. பிரதமா் மந்திரி பதவிக்கு இம்தியாஸ் பாக்கீா் மாக்காா் பொறுத்தமானவா் எனசுஜிவ சேரசிங்க அங்கு உரையாற்றினாா்.
அவரின் பின் உரையாற்றிய இம்தி்யாஸ் இவ் அரைகூவலுக்கு எவ்வித பதிலும் அளிக்க வில்லை.
(அஷ்ரப் ஏ சமத்)
Post a Comment