ஜனாதிபதியும், பிரதமரும் களவு செய்ய மாட்டார்கள் - சந்திரிகா
சர்சைக்குரிய பிணைமுறி சம்பவத்தில் தவறு இடம்பெற்றிருக்குமாயின் அதன்பொருட்டு தற்போது தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார். வெயங்கோட பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் களவு செய்ய மாட்டார்கள். என்றாலும் அமைச்சர்களும் சில அதிகாரிகளும் தவறு செய்தவர்களாக இருக்கலாம். எனினும் அவர்களை ஒன்றாக கொன்று ஒழித்து விட முடியாது.
படிப்படியாகவே தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க முடியும். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் அதன் முன்னாள் ஆளுநர் உடனே வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
நிதி அமைச்சரும் பதிவியிலிருந்து நீக்கப்பட்டார். என்றாலும் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் அவ்வாறு ஒரு தண்டனையும் வழங்கப்பட்டதில்லை. மகிந்த ராஜபக்ஷவும் பல பில்லியன் கணக்கில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
அது தொடர்பில் தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சந்திரிகா குறிப்பிட்டார்.
இதை வாசிக்கும் போது அம்மாமார்கள் ஒரு சொட் அடித்துவிட்டு ஏதேதோ உளத்துகின்றார்கள் போல் தொிகிறது.
ReplyDelete