Header Ads



ஒட்டுமொத்த முஸ்லிங்களின், தலைநகரம் கல்முனை - ஹரிஸ்


தமிழ்த் தலைமைகளின் தேவைகளுக்காக கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பதற்கு நாங்கள் ஒரு போதும் துணைபோக முடியாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பிரதி அமைச்சருமான ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

மருதமுனையில் நேற்று இரவு உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

வடக்கில் இருந்து கிழக்கு தனியாக பிரிய வேண்டும் என்று பாடுபட்டவர்கள் நாங்கள். அதனை ஒருபோதும் இலகுவாக இணைக்க எந்த காரணம் கொண்டும் சம்மதிக்க மாட்டேன்.

மட்டக்களப்பு எவ்வாறு தமிழர்களது முகவெற்றிலையாக திகழ்கின்றதோ, அதே போன்று யாழ்ப்பாணம் எவ்வாறு இருக்கின்றதோ அது போன்று தான் கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் கல்முனை என்பது முஸ்லிங்களின் பூர்வீக சொத்து.

அதனை இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. கிழக்கு மாகாண முஸ்லிங்களுடைய அபிலாசை கிழக்கு மாகாணம் வடக்கில் இருந்து பிரிந்திருக்க வேண்டும் என்பதே.

கிழக்கு மாகாணத்தில் எங்களது கட்சியில் இருந்த முதலமைச்சருக்கும் வடக்கில் இருந்து கிழக்கு தனியாக பிரியவேண்டும் என்ற ஒரு பிரேரணையை கூட கொண்டுவர முடியவில்லை.

வட மாகாண முஸ்லிங்கள் இன்னும் தங்களது இருப்பிடங்களுக்கு சென்று வாழமுடியாத நிலையிலே இருக்கும் இந்த காலகட்டத்தில் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க முடியாமல் இங்கு வந்து வீரவசனங்களை எம்மக்களிடையே கொட்டித்தீர்க்கிறார்கள்.

இதுதான் அவர்களது அரசியல் பிரவேசமாகும். வட மாகாண முஸ்லிம்களை நடுத்தெருவில் விட்டிருக்கின்றனர்.

கல்முனை என்பது இந்த நாட்டில் இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிங்களின் தலைநகரம் என்பதனை யாரும் மறந்துவிட முடியாது. இதனை தரைவார்த்து விட்டு நாங்கள் தலைகுனியும் சமூகமாக மாறிவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. ஹரீஸ் அவர்களே, நீங்கள் எதையுமே முழுமையாக கதைப்பது இல்லை, நீங்கள் சொல்லுவது உங்களுக்கு மட்டும் தான் புரியும். கல்முனை மாநகரத்தை தாரை வார்ப்பது என்பது என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று எங்களுக்கு புரியவில்லை. சாய்ந்தமருத்துக்கான தனியான பிரதேச சபையை கொடுப்பதில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றுதான் கூறுகிறீர்கள். கல்முனை மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை வேறு ஒரு கட்சிக்கு போவதை குறிப்பிடுகிறீர்களா என்று புரியவில்லை. ஆனால் இந்த முறை தேர்தல் முஸ்லிம்காங்கிரஸின் தலைமதத்துவத்தை நிராகரிப்பதட்கான தேர்தலாகவே கருதுகிறோம். இந்த சந்தர்ப்பம் முஸ்லீம் மக்களுக்கு கிடைத்த மாபெரும் சந்தர்ப்பம் ஆகும். இச்சந்தர்ப்பத்தை முஸ்லீம் காங்கிரசுக்கு எதிராக மக்கள் தங்கள் வாக்குகளை பாவிக்க வேண்டும் என்பதுவே இந்த தேர்தலின் முக்கிய விடயமாக முன்வைக்கப்படுகிறது. முஸ்லீம் காங்கிரசுக்கு எதிரணியில் இருக்கும் எவருக்கும் நீங்கள் வாக்களிக்கலாம் அதிலும் வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளவருக்கு வாக்களிப்பது முஸ்லீம் காங்கிரசின் தோல்வியை உறுதிப்படுத்தும் என்பது எமது ஆலோசனையாகும்.

    இதோ முஸ்லீம் காங்கிரசின் தலைமையின் அசல்களில் சில.

    ** அரசியல் அறிவு என்பது அவருக்கு சுத்த சூனியம். Political Potent
    ++ 2004 தேர்தல், ராஜா பக்சவை ஆதரித்தது, 18 திருத்த சட்டம், ஒஸ்லோ பேச்சு வார்த்தை, தெவினகமுவ சட்டமூலம், ஏன் இந்த தேர்தலில் அம்பாறையில் யானை வெற்றியடைய வேண்டும், மட்டக்களப்பில் யானை தோக்கடிக்கப்பட வேண்டும். என்ன கூத்தூ இது. 100 இக்கு 150 % முஸ்லீம் மக்களை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்கின்றார் தானைத் தலைவன் ஹக்கீம் அதட்கு நீங்கள் அவர் போடும் எச்சிலுக்காக முஸ்லீம் மக்களை காட்டி, கூட்டி கொடுக்கிண்றீர்கள்.

    ** கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில்லை. தேசியப்பட்டியலில் பெயர் போடுவீர்கள் ஆனால் தம்பிக்கும் நண்பனுக்கும் எம் பி பதவி கொடுப்பீர்கள். தோற்று போன ஒருவருக்கு எம்பி பதவி கொடுத்தீர்கள் கட்சியை வளர்ப்பதட்கு. எம்பி யாக இருக்கும் போதே கட்சியை வளர்க்க இல்லை இனியுமா? பாரும் இம்முறை கிண்ணியா, மூதூரில் என்ன நடக்கின்றது என்று.

    ** ஹசன் அலி மிகவும் கேவலமாக ஏமாற்ற பட்டுள்ளார் ( அவரது அரசியல் சரியா பிழையா என்பது வேறு விடயம்). இது மாபெரும் கபடத்தனம்.

    ஆக இந்த தலைமைத்துவம் முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது எனவே இதை அகற்றுவதட்க்கு மிகவும் நல்ல சந்தர்ப்பம் மக்களின் கையில் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை மக்கள் பாவிப்பதட்கு... முஸ்லீம் இளைஞர்களும், புத்திஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும் இந்த மக்களை வழிநடத்துவார்கள் என்று நம்புகிறோம்.

    ReplyDelete
  2. அந்த ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தலைநகரத்திற்கு நீங்க என்ன செஞ்சிருக்கீங்க மிஸ்டர் ஹரீஸ்... ரோட்டு போட்டன் என்டு மட்டும் அல்லாஹ்வுக்காக சொல்லாதீங்க.. நீங்க சொல்லக்கூடிய அந்த ஒன்டு ரென்டு ரோட்டும் கூட 10 வருசத்துக்கு முதல் போட்டிருக்க வேன்டியது.. உங்கட ஊத்த அரசியலுக்காக காலம் தாழித்தி மக்களுக்கு கிடைக்க வேண்டிய ஹக்க பிந்தி போட்டிங்க..

    இவ்வளவு பெரிய கல்முனை வாழ் மக்கள் ஒர அளவான சிறுவர் பூங்கா ஒன்டுக்கு ஏறாவூர் வரைக்கும் போக வெச்சதுதான் உங்கட ஆகப்பெரிய சாதனை.. 17 வருசமா எம்.பி யா இருந்து அதுல 3 வருசம் மினிஸ்ட்டரா இருக்கிர ரோட்டு போடத்தான் லாயக்கு என்டா.. நீங்க இந்த முறை கல்முனைல ஏதாவாது ஒரு வட்டாரத்துல ஓட்டு கேட்டு இருக்கலாம்.. ஒரு ஒழுங்கைக்கு கொங்க்ரீட் போட்டாலும் பெரிய சாதனையா சொல்லிக்கலாம். (17 வருசம் எம்.பி யா இருந்து 3 ரோட்டு என்டா.. 4 வருசம் மாநகர சபை உறுப்பினரா 1 ஒழுங்கை பெரிய விசயம்தான்)

    ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தலைநகரத்தில் ஒரு முஸ்லிம் வேனா.. வேறு எந்த மத சகோதரராவது ஒன்னுக்கு போக கூட ஒரு கக்கூஸ் இல்ல..
    கண்டித்தலைவர் அப்பப்ப வந்து ஒரு சோ காட்டிட்டு ஆயிரம் விளக்குட உதவியால 4 கரகோசத்தையும் எடுத்திட்டு போயிடுவாரு.. அவருக்கு அவர்ர பிரச்சின..
    ஒவ்வொரு முறையும் தமிழன்ட கைக்கு போயிடும்.. அவன்ட கைக்கு போயிடும்.. இவன்ட கைக்கு போயிடும் என்டு மாற்று சகோதரர்களை பக்காண்டி கனக்கா பயம் காட்டி அந்த பயத்த நிரந்தர விஷமாக்கிட்டிங்களோ என்டும் தோனுது.. (தமிழ் அரசியல்வாதிகளும் நம்மள பக்காண்டி ஆக்கிட்டானுகோள்)
    சரி இந்த தேர்தல்ல யாருக்குத்தான்டா ஓட்டு போர்ரன்டு பாத்தா.. மயில் தலைவரு ஐஸ்கிரீம் தலைவரையே மிஞ்சிடுவாரு.. அவர்ர கேம் இப்ப சாய்ந்தமருது மக்களும் கல்முனை மக்களும் எதிரி போல ஒரு தோற்றப்பாட்ட உருவாக்கி இருக்காரு…அவரும் சரி வரா.. சரி வேற யாரு.. நம்மட குதிரைத்தலைவர்.. அவரு ஊருக்குள்ள போட்ட ஆக்கள் அஞ்சி சதத்துக்கும் உதவாத ஆக்கள்..
    ஆக ஒட்டு மொத்த முஸ்லிம்களின் தலைநகரத்தில முஸ்லிம்கள் ஓட்டு போட வக்கத்தவன் யாரும் இல்ல.. ஓட்ட தூக்கி எறிஞ்சிட்டு வேலய பாருங்க மக்களே..

    ReplyDelete
  3. உங்கட கை ஸ்ட்டைல பாத்தா நீங்க அப்பம் சுடத்தான் லாயக்கு பாஸ்..
    நல்லா படம் பாத்துட்டு படுக்க வேண்டியது.. பார்லிமென்டுக்கும் போறல்ல... என்ன கூந்தலுக்கு உங்களுக்கெல்லாம் எம்.பி பதவி

    எல்லா கெபினட் இல்லாத மினிஸ்ட்டர் மாருக்கும் கெபினட் மினிஸ்ட்டர் அலுவலக விடயங்களில் கூப்பிர்ராரு இல்லன்டு ஒரே கம்ளயின்ட்.. ஆனா எங்க பாஸுக்கு மட்டும் நோ ப்ரோப்ளம்.. ஏன் என்டா.. கூப்பிட்டாத்தான் எங்களுக்கு ப்ரோப்ளம்..

    ReplyDelete
  4. Are you crazy it could be your opinion.stop it this is the limit

    ReplyDelete

Powered by Blogger.