தேர்தலில் போட்டியிட, பாலியல் லஞ்சம்
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சியின் கீழ் போட்டியிட வாய்ப்புக் கேட்ட நடிகை ஒருவரிடம், அதற்கு பாலியல் ரீதியாக லஞ்சம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகை மதுஷா ராமசிங்க, நடிப்புத் தொழிலைக் கைகழுவிவிட்டு அரசியலில் இறங்க விரும்பினார். அதன்படி, மஹிந்த ராஜபக்சவின் கட்சியில் இணைந்துகொண்ட அவர், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட நினைத்தார்.
ஏற்கனவே கட்சி நடவடிக்கைகளில் மும்முரமாகப் பங்கேற்ற அவர், உள்ளூராட்சித் தேர்தலில் கட்டாயம் போட்டியிடவேண்டும் என்று விரும்பினார்.
இதற்காக அக்கட்சியின் முக்கிய உறுப்பினரும் மஹிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவருமான ஒருவரை அணுகியதாகவும் அதற்கு அவர், தன் முன் நிர்வாணமாகக் காட்சி தந்தால் வாய்ப்புத் தருவதாகக் கூறியதாகவும் மதுஷா கூறியுள்ளார்.
இது குறித்து மஹிந்த ராஜபக்சவிடம் தாம் புகாரளித்தபோதும் அதை அவர் லட்சியம் செய்யாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மதுஷா தெரிவித்துள்ளார்.
இத்தகவலை ஆங்கில இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
Any leader has a moral obligation to look into these sort of allegations.
ReplyDelete