”நீங்கள் இதுவரை சந்தித்தோரில் என்னைப் போன்ற, இனச்சார்பற்றவரை நீங்கள் பார்த்திருக்க முடியாது”
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் இனவாதி அல்ல என, வெள்ளை மாளிகை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை டொனால்ட் டிரம்ப், குடியேற்ற சீர்திருத்தத்தின் இரு பகுதியினருடன் ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன்போது, ஆபிரிக்க நாடுகள் சிலவற்றைத் தகாத வார்த்தைகளால் அவர் விமர்சனம் செய்ததாகவும், அந்த நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் குடியேற, ஏன் அனுமதிக்கவேண்டும் எனவும் கேள்வி எழுப்பியதாகவும் அவர் மீது விசனம் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை டிரம்ப் தகாத வார்த்தைகளில் விமர்சித்ததை, ஜனநாயகக் கட்சி உறுப்பினர் டிக் டர்பினும் கடந்த வாரம் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், இதனை மறுத்துள்ள டிரம்ப “நான் இனவாதி அல்ல” நீங்கள் இதுவரை சந்தித்தோரில் என்னைப் போன்ற ஓர் இனச்சார்பற்றவரை நீங்கள் பார்த்திருக்க முடியாது” என ஊடகவியலாளிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment