இன்று "சுப்பர் நிலவு" தென்படும் - அலைகள் உயர எழும், இயங்கை அனர்த்ததிற்கு வாய்ப்பில்லை
வழக்கத்தை விட 30 வீதம் அதிக பிரகாசமான சந்திரனை இன்று -01- காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் பீடத்தின் வானியல் மற்றும் விண்வெளி அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
“முழுமதி நாளான இன்று, சுப்பர் நிலவு என அழைக்கப்படும் அதிக பிரகாசமான- வழக்கத்தை விட பெரியதான சந்திரனைக் காண முடியும்.
இன்று சந்திரன் வழக்கத்தை விட 14 வீதம் பெரியதாகவும், 30 வீதம் அதிக பிரகாசமானதாகவும் தென்படும். இதனால், உயரமான அலைகள் எழக்கூடும்.
அடிவானத்தில் இருக்கும் போது இன்று மாலை உதயமாகும் போது, அல்லது நாளை அதிகாலை மறையும் போது, அதிக பிரகாசமான இந்த சுப்பர் நிலவை சிறிலங்காவில் இருந்து பார்ப்பது சிறந்தது.
சில வதந்திகள் பரவுவது போல, இந்த சுப்பர் நிலவினால், எந்த இயற்கை அனர்த்தங்களும் ஏற்பட வாய்ப்பில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.
ReplyDelete(அல்குர்ஆன் : 13:2)