முஸ்லிம் பிரதேசங்களில் அதிகரித்துவரும், போதைப் பொருள் பற்றி சமூகம் விழிப்பூட்டப்பட வேண்டும்
போதைப் பொருள் விற்பனையின் பின்னணியில் ஒரு சில அரசியல்வாதிகள் இருந்து வருவது மனித சமூகம் சீரழியும் அபாயத்தை நெருங்குவதை உணர்த்துவதாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் அதிகரித்து வரும் போதைப் பொருள் சார்ந்த குற்றச் செயல்கள் பற்றி சமூகம் விழிப்பூட்டப்பட வேண்டும் என்று ஊடகங்கள் வாயிலாக இன்று வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,
போதைப் பொருள் பாவனையை, விற்பனையை ஒழிக்கப்போவதாக கூறிக் கொண்டு ஒரு சில அரசியல்வாதிகள் சில பிரதேசங்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இருந்தபோதும் இவ்வாறான பிரதேசங்களில் போதை மாத்திரை வியாபாரம் குறைந்ததாகவும் இல்லை, வியாபாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு சென்று வந்தவர்கள் திருந்தியதாகவும் இல்லை.
அவர்களுக்கெதிராக எதுவிதமான தீர்க்கமான முடிவுகளை எடுத்ததாகவும் இதுவரை தெரியவில்லை.
இவை அனைத்தையும் செய்பவர்கள் பிள்ளையையும் கிள்ளவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் சில அரசியல்வாதிகள் அவர்களின் அற்பசொற்ப அரசியல் வாழ்க்கைக்கு இளைஞர் சமுதாயம் பலியாகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளை இன்னும் நமது பிரதேசங்களில் இருந்து நீக்கவிட்டால் அப்பிரதேசங்களிலுள்ள எதிர்கால அப்பாவி சமூகம்தான் பாதிக்கப்படும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகளோ அல்லது கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகும் போதை மாத்திரை வியாபாரிகளோ ஒரு போதும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதையும் சிந்தித்துணர வேண்டும்.
எனவே போதைப் பொருளுக்கெதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.
விழிப்புணர்வெல்லாம் 10வருடங்கள் முன்னரே சாத்தியம். இன்று போதையை விற்பவன், வாங்குபவனை , விபச்சாரக்கேஸ்களையும் உரார் பார்க்கும் வகயில் ஓடவிட்டு சுடவேண்டும்.( நாட்டுசட்டமென்று பசப்பவரவேண்டாம்).
ReplyDelete