A/L பரீட்சையில் 8267 பேருக்கு 3 A சித்தி - பாடங்களில் சித்தியடையத் தவறியவர்கள் 22021 ஆகும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 8267 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.
வெளியாகியிருந்த 2017ம் ஆண்டுக்கான பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் விபரங்கள் குறித்து இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மூன்று பாடங்களிலும் சித்தியடையத் தவறிய மாணவ மாணவியரின் எண்ணிக்கை 22021 ஆகும்.
கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்ட மாணவ மாணவியரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
2016ம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையில் 7126 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டிருந்தனர்.
இதேபோன்று 2016ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது மூன்று பாடங்களிலும் சித்தியெய்த தவறிய மாணவ மாணவியரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் 22392 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் சித்தியடையத் தவறியிருந்தனர்.
மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்ட மற்றும் மூன்று பாடங்களிலும் சித்தியடையாத மாணவ மாணவியரைக் கொண்ட மாகாணமாக மேல் மாகாணம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment