வேட்பாளர்களே, மார்க்க வரையறைகளைப் பேணுங்கள் - ACJU
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வருடாந்தப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் அஷ்-ஷைக் ஏ.ஸி. அகார் முஹம்மத் ஆற்றிய உரையின் சிறு பகுதி,
அண்மையில் இடம் பெறவுள்ள தேர்தலில் சிறந்த முன்மாதிரியானவர்களை தெரிவு செய்ய வழிகாட்டுவதும், போதை வஸ்துக்களுக்கு அடிமையாகியுள்ள எமது வாலிபர்களை பாதுகாப்பதும் உலமாக்களின் மிகப் பெரிய பொறுப்பு என குறிப்பிட்டார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதவி தாங்குஞர்களுக்கான வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜம்இய்யாவின் மத்திய, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உட்பட பிரதேசக் கிளைகள், மாவட்டக்கிளைகளின் பதவிதாங்குஞர்கள் அனைவரும் பின்வரும் தீர்மானங்களை ஏக மனதாக நிறைவேற்றினர்.
அண்மையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபை தேர்தலில் சம்பந்தப்படும் முஸ்லிம் வேட்பாளர்கள் மார்க்க வரையறைகளைப் பேணி நடந்துகொள்ளுமாறு வேண்டிக் கொள்ளும் இம்மாநாடு சமூக உணர்வும் பொதுநல மனப்பான்மைiயும் கொண்ட பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு பொதுமக்களை வேண்டிக் கொள்கின்றது. மேலும் உலமாக்கள் வேட்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான வழிகாட்டல்களை வழங்குமாறும் இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
Post a Comment