அல்லாஹ்வை நீண்டநேரம், வணங்கும் இறைபக்தர்
ஆஜானபாகுவான உடல். வசீகரமான தோற்றம். கேர்லி ஹெயார். எல்லோரையும் கவரும் உருவம். அன்றைய வரலாற்றின் மிகச்சிறந்த வில்வீரர் (Archer). அதே போல் அன்றைய காலத்தில் இரவில் அல்லாஹ்வை மிக நீண்ட நேரம் வணங்கும் இறைபக்தர். இஸ்லாமிய அரசின் இன்னொரு பெருந்தளபதி ஸய்த் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹுஅன்ஹு.
தாருல் அர்க்கத்தில் தன் 17-ம் வயதில் இணைந்து கொண்ட மூத்த ஸஹாபி. அல்குர்ஆனை மறைவாகவும் இரகசியமாகவும் கற்ற குழுவில் அவரும் ஒருவர். தாருல் அர்க்கத்தை பின்னாட்களில் ஒரு பயிற்ச்சி பாசறையாக மாற்றியவர்.
தனது இராணுவத்தை சிறு சிறு குழுக்களாக பிரித்து, எதிரியின் பாதுகாப்பு முன்னரங்கு வரை நகர்த்தி (லீஃப் போர்வர்ட் யுனிட்களாக) இரவு நேர கரந்தடி தாக்குதல்களை (கெரில்லா வோர்பயர்) நிகழ்த்திய பின் அவர்களை தனியாக, இருவராக களைந்து தளம் திரும்ப வைக்கும் போரியல் யுக்திகளை கையாண்டவர். அறிமுகப்படுத்தியவரும் கூட.
பாரசீக தளபதி ஹோர்மூஸான் சொன்னான் “இந்த அபீவக்காஸின் யுக்தி அப்போதே தெரிந்திருந்தால் நான் மதீனாவை எப்போதோ கைப்பற்றியிருப்பேன் ” என்று.
அபீவக்காஸ் (ரலி) என்ன சொன்னார் தெரியுமா!.
“அன்று தாருல் அர்க்கத்தில் குர்ஆனை படிக்க நாம் பதுங்கி பதுங்கி இரவில் வருவோம். பல நேரங்களில் நான் தவண்டு தவண்டு தாருல் அர்க்கத்தினுள் நுழைந்துள்ளேன். இரவோடிரவாக புனித குர்ஆனை கற்றுவிட்டு நாங்கள் மெல்ல மெல்ல தனித்தனியாக பிரிந்து களைந்து சென்று விடுவோம். எம்மை கொல்ல காத்திருக்கும் காபிர்களின் மத்தியில் பல காலம் இதனை சிற்ப்பாக செய்து வந்தோம். அந்த அனுபவங்களை தான் எனது இராணுவ தாக்குதல்களில் நான் கையாண்டேன்” என.
உஹத்தின் கொடும் யுத்தம் நிகழும் தருணம். இக்ரிமா ஒரு சிறந்த குறைஷி வில்வீரனை தேர்ந்தெடுத்து நபியை தட்டுவதற்கு அனுப்பியிருந்தார். அவன் நபியை காத்து வலையமாக நின்ற முன்னணி வீரர்களை ஒவ்வொருவராக கதையை முடித்துக்கொண்டே வந்தான். நபி இதனை உணர்ந்து கொண்டார். அபீவக்காஸ் ரலியை அழைத்து விடயத்தின் சீரியஸ்னஸை சொல்லி அவனை தேடிப் போடுமாறு வேண்டினார்.
அபீவக்காஸ் (ரலி) அவர்களின் அம்புறாவில் எந்த அம்புகளும் இல்லை. ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலை. அந்த குறைஷ் வீரனின் அம்பு இன்னொரு ஸஹாபியை சாய்க்கும் வரை காத்திருந்தார். அவன் வீசிய அம்பு ஒன்று பின் பகுதி உடைந்த நிலையில் வந்து வீழ்ந்தது. அதனை எடுத்து வில்லேற்றிய போது நாணில் தங்க அடிப்பகுதி இல்லை. வானை ஒரு முறை அண்ணாந்து பார்த்து விட்டு அவனை இனங்கண்டு அந்த அம்பை எய்தார். அவன் நெற்றியில் பொட்டிற்று நின்றது அந்த அம்பு.
காதிஸீய்யா போர். எதிரிகளை ஊடறுக்க வேண்டும் என்றால் ஆற்றை கடக்க வேண்டும். ஆழமான ஆறு. மெதுவாகவே நகர முடியும். அந்த ஸ்லோவ் மூமென்ட்ஸ் பாரசீகர்களிற்கு தாக்குதல் தொடுக்க வசதியான வாய்ப்பு. ரிவர் தஜ்லாஹ்வை அவர் தலைமையில் குதிரைகள் தைரியமாக கடந்தது. ஆனால் பாரசீக படைகளால் அபீவக்காஸின் முன்னேற்றத்தை தடுக்கவோ தாக்கவோ முடியவலில்லை. காரணம்...
ஒரு ஹை-ட்ரெயின்ட் சினைப்பர் யூனிட் ஆற்றங்கரை புதர்களின் உள்ளே கவர் எடுத்து, அபீவக்காஸ் ரலியல்லாஹுஅன்ஹுவின்
தாக்குதல் அணி இழப்புக்கள் இன்றி முன்னேற சப்போட்டிவ் தாக்குதல்களை பாரசீகர்ள் மேல் மேற்கொண்டது. ஒவ்வொருவராக சரிய ஆரம்பித்தனர் பாரசீகர்கள். எய்யப்பட்ட அம்புகள் அவ்வளது துல்லியமாகவும், சரமாரியாகவும் இருந்தது. அவ்வளவு ஒரு வேகமான மார்க்ஸ்மென்களை அவர் உருவாக்கியிருந்தார்.
உஹத்தில் தான் கற்றுக் கொண்ட பாடங்களை காதிஸிய்யாவில் செயலுருவாக்கினார் அபீவக்காஸ் ரலிய்லாஹு அன்ஹு. இஸ்லாமிய இராணுவத்தில் கெரில்லா யுனிட்களை, சினைப்பர் யுனிட்களை புகுத்தியவர். இதன் பின்னே காலித் இப்னு வலீத் அவர்கள் அழித்தொழிப்பு தாக்குதல் அணிகளை உருவாக்கினார்.
இஸ்லாமிய அரசின் அற்புதமான தளபதி. அவரது சிறப்பியல்பே “வேகம்”. ஒரு முறை தாக்குதலினால் காயப்பட்டு விட்டார். ஆனால் களத்தில் நின்றார். உயரமான பீடத்தில் ஏறி நின்று தனது கொமாண்ட்களை வழங்க தவறவேயில்லை.....
முஜாஹிதீன்களே இடப்பக்கமாக முன்னேறுங்கள்....
இப்போது வேகமாக வழப்பக்கம் திரும்புங்கள்......
முஹைரா நீ இப்போது உன் அணியுடன் வேகமாக முன்னேறு....
ஜரீர் நீ இப்போது சற்று பின்வாங்கு ......
நுஃமான் உன் இன்பன்ட்ரியை வாட்களை கொண்டு தாக்க உத்தரவிடு.......
அஸ்ஹத் இப்போது வேகமாக முன்னேறி அவர்களை ஊடறு......
ஓஃககா உன் அணியை அஸ்ஹத்தின் பின்னால் வேகமாக நகர்த்திச்செல்........
.
அடுத்த கொமாண்ட் அவர் வாயில் இருந்து வரவில்லை, அதீத குருதிப்பெருக்கால் சரிந்து விட்டார். இஸ்லாமிய வரலாற்றின் ஒப்பில்லா தளபதி. மிக தைரியமும் நெஞ்சுரமும் மிக்கவர்.
பாரசீகத்தை கைப்பற்றியவர். காதீஸிய்யா செய்ன்ஸ் ஒ்ஃப் வோரின் தளபதி. நபியில் ஆரம்பித்து முஆவியா (ரலி)-யினது இராணுவம் வரை பங்கெடுத்த தளபதி. பிரதர்ஸ் வோரின் புலால் வாசம் அவரை சீனதேசம் வரை பின்தள்ளியது.
-Abu Maslama-
Post a Comment