கடந்த வருடம் 81 ஊடகவியலாளர்கள் படுகொலை
கடந்த 2017 ஆம் ஆண்டில் கடமையின் போது தாக்குதல்களுக்கு இலக்காகி குறைந்தது 81 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பெல்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம் (ஐ.எப்.ஜே.) நேற்று வெளியிட ப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முந்திய ஆண்டான 2016 ஆம் ஆண்டு கடமையின் போது 93 ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ள நிலையில் அத்தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்திலான உயிரிழப்புகள் சிறிது குறைவாக உள்ள போதும் அத்தொகை கவலை தரக்கூடிய ஒன்றாகவே தொடர்ந்து உள்ளதாக அந்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
"அத்துடன் 2017 ஆம் ஆண்டில் பெருமளவான ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 250 பேருக்கும் அதிகமானோர் சிறையிலேயே தொடர்ந்தும் உள்ளனர்" எனத் தெரிவித்த சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம், ஊடகங்கள் சுய தணிக்கைக்கு உட்படுத்தப்படுவது பரந்தளவில் இடம்பெறுவதுடன் ஊடகவியலாளர்கள் சுதந்திர ஊடகவியலுக்கு எதிரான முறையில் தாக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உட்பட்டு வருவது மோசமான அளவில் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
உலகில் ஊடகவியலாளர்கள் இலக்குவைக்கப்பட்ட படுகொலைகள், கார் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சமர் என்பவற்றில் சிக்கி தமது உயிரை இழந்து வருவதாக அந்த சம்மேளனம் கூறுகிறது.
அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட நாடாக மெக்ஸிக்கோ உள்ளது, இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச ஊடக
Post a Comment