Header Ads



80 வீதமான வாக்காளர்கள், விளக்கமின்றி இருக்கிறார்கள்

சிறிலங்காவின் புதிய தேர்தல் முறை தொடர்பாக 80 வீதமான வாக்காளர்கள் சரியான விளக்கமின்றி இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான, பவ்ரல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி,

“புதிய தேர்தல் முறை தொடர்பாக நாடு முழுவதும், விளக்கமளிக்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

எனினும், சில வேட்பாளர்கள் கூட, புதிய தேர்தல் முறை பற்றிய விளக்கமின்றி இருக்கின்றனர்.

உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்திருத்தம் மற்றும் மீள்திருத்தம் என்பன, வாக்காளர்களை அதிகளவில் குழப்பியுள்ளது.

தேர்தல் மறுசீரமைப்புகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.