Header Ads



தேர்தலில் போட்டியிடும் 7 வேட்பாளர்கள் கைது

(எம்.எப்.எம்.பஸீர்)

நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்கள் தொடர்பில் இது­வரை 51 முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­துடன் 23 சுற்­றி­வ­ளைப்­புக்­களும் பொலி­ஸாரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இத­னை­ய­டுத்து இம்­முறை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் 7 வேட்­பா­ளர்கள் உள்­ளிட்ட 94 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களில் ஒரு வேட்­பாளர் உள்­ளிட்ட 8 பேர் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஏனையோர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

பொலிஸ் தலை­மை­ய­கத்தில் உள்ள பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அத்­துடன் தேர்தல் முறைப்­பா­டுகள், சுற்றி வளைப்­புக்­களில் கைதாவோர் அதி­க­ரிக்கும் சூழலில், தேர்­த­லுக்கு சவால் விடுக்கும் வண்ணம் ஏதும் நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­மாயின் அதனை முற்­றாக கட்­டுப்­ப­டுத்த பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யினர் பயன்­ப­டுத்­தப்­ப­டுவர் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். இதற்­காக நாட­ளா­விய ரீதியில் பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யினர் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

இம்­முறை தேர்­தலில் சட்­ட­வி­ரோத பிர­சார நட­வ­டிக்­கை­களை தடுக்க போது­மான நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுத்­துள்ளோம். பொலிஸ் நிலை­யங்கள் ஊடாக அந்தந்த பகு­தி­களில் பகல், இரவு நேர ரோந்து பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்ட விரோதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. ஆனால் இன்னும் சட்ட விரோதமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றப்படாமல் சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் உள்ளது... காலையில் பள்ளிவாசல் செல்லும் போது, வேலைகளுக்கு செல்பவர்கள், பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் அனைவரும் இவர்களின் பொய்யான முகங்களை பார்த்துக்கொண்டு செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது..

    ReplyDelete

Powered by Blogger.