ஜமால்தீன் லெவ்வையின், 700 பேரடங்கிய குடும்பம் (ஓன்றுகூடிய அபூர்வ நிகழ்வு)
-JM-Hafeez-
அக்குறணையைச் சேர்ந்த ஜமால்தீன் லெவ்வை என்றழைக்கப்பட்ட பிரபல நபர் ஒருவரின் 11 பிள்ளைகளது குடும்பத்தினரை ஏ.ஜே. குடும்பம் என அழைப்பர்.
அக்குறணையைச் சேர்ந்த ஜமால்தீன் லெவ்வை என்றழைக்கப்பட்ட பிரபல நபர் ஒருவரின் 11 பிள்ளைகளது குடும்பத்தினரை ஏ.ஜே. குடும்பம் என அழைப்பர்.
மேற்படி ஏ.ஜே. குடும்பத்தின் பேரன்களும், கொல்லுப் பேரர்களும் அவர்களது பரம்பரை வாரிசுகளுமான ஆறு தலைமுறையைச் சேர்ந்தவர்களில் உயிருடன் சுமார் 700 பேர் உள்ளனர். அங்கத்தவர்களது ஒன்று கூடல் நிகழ்வு (14.1.2018) அம்பதென்ன, கார்சல் பார்க்கில் இடம் பெற்றது.
இதில் சுமார் 500 பேரளவில் பங்குகொண்டனர். அது தொடர்பாக சட்டத்தரணி ஏ.எல்.எம். சித்தீக் அறிமுக உரை நிகழ்த்துவைதையும் கலந்துகொண்டவர்களது ஒரு பகுதியையும் காணலாம்.
மேற்படி குடும்ப வாரிசுகளான ஓய்வுபெற்ற பிரதிப்பரீட்சை ஆணையாளர் எஸ்.எச்.எம். சபீக், மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் அடங்களாக முதியோர்முதல் சிறியோர் வரை வாரிசுகளான 500 பேர் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Masha Allah.
ReplyDelete