தரம் 6 முதல் உயர்தரம் வரையிலான, வகுப்புக்களுக்கு மடி கணினி
நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளிலும் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான வகுப்புக்களுக்கு மடி கணினிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார். மடி கணினிகளை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில்,
சர்வதேச ரீதியில் தற்போது கல்வி நடவடிக்கைகள் தொழில்நுட்பமயப்படுத்தப்பட்டுள்ளன. சர்தேச ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடுகள் பலவற்றில் ஆரம்ப கல்வி தொடக்கம் கல்வி நடவடிக்கைகள் தொழில்நுட்ப ரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இலங்கையிலும் கல்வி நடவடிக்கைகளை தொழில்நுட்ப ரீதியில் முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் தற்போது இலங்கையின் கல்வி துறை முன்னைய காலங்களை விடவும் பாரிய முன்னேற்றங்களை அடைந்து வரும் நிலையில், மேலும் அதனை விருத்தி செய்யும் வகையிலான செயல் திட்டங்களை அரசாங்கம், கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி அமைச்சு என்பன இணைந்து முன்னெடுத்து வருகின்றன. இச் சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளிலிருந்தும் இதற்கான உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன.
அதனடிப்படையில் இலங்கையின் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளுக்கு இலவச நூல்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் ஆசிரியர் பரிமாற்றம் பற்றிய செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இந்தியாவில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment