60 UNP செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதியுடன் இணைந்தனர்
மேல் மாகாண சபையின் முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சுனில் லெஸ்லி குருவிட்டாரச்சி உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இன்று (10) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகைதந்த சுமார் அறுபது பேர் அடங்கிய குழுவினர் இவ்வாறு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியால் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், அச்செயற்பாடுகளுக்கு தமது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இதன்போது அவர்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, கொலன்னாவ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன சோலங்காரச்சி ஆகியோர் இதன்போது உடனிருந்துள்ளனர்.
Post a Comment