Header Ads



திருகோணமலையில் 6 உள்ளூராட்சி மன்றங்களை அ.இ.ம.கா. கைப்பற்றும் - மஹ்ரூப்

-எப்.முபாரக்-

திருகோணமலை மாவட்டத்தில் ஆறு உள்ளூராட்சி மன்றங்களை அகில இலங்கை மக்கள் கைப்பற்றும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.   

                              கிண்ணியாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேற்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (8)  நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.        அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் சட்ட மூலத்துக்கோ,சிறுபான்மை மக்கள் தேவைகள் தொடர்பாகவோ அப்போது  குரல் கொடுக்காமல் மஹிந்த அரசிடம் பல மில்லியன் ரூபாய்களை பெற்றுக்கொண்டு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார், அதேபோன்று இன்று  மைத்திரிபால  சிறிசேனாவின் அரசாங்கத்திடமும் எவ்வளவு பெற்றுக்கொண்டாரோ தெரியாது.தற்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் நளாந்தம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இனைந்து வருகின்றார்கள் அதற்கு காரணம் ரவூப் ஹக்கிமினின் போலியான செயற்பாடுகளையும்,போலியான அரசியலுமே வெளிப்படுத்துகின்றது. 

   மக்கள் விரும்புகின்ற சிறந்த அரசியல் செயாற்பாடுகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் காணப்படுகின்றது அனைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.சிறுபான்மை மக்களின் காணிப்பிரச்சினை,மேய்ச்சல் நிலப் பிரச்சினை,மற்றும்மீன்பிடிப் பிரச்சினைகள் என பல முக்கிய பிரச்சினைகள் காணப்படுகின்றது இது அனைத்தும் இந்த நல்லாட்சி அரசாங்கம் தீர்த்து வைக்கும் என நம்புகின்றோம்.இத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கையைப் பலப்படுத்துவதன் மூலம் தேசிய அரசுடன் பேரம் பேசுகின்ற சக்தியாக மாறுவோம்.அதற்காக தான் பலமான திறமையான வேற்பாளர்களை மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் இறக்கியுள்ளோம் உங்களின் பகுதிகளின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்றார்.                           
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஸாக் ரஹ்மான்,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் நௌசாத் மஜித்,மற்றும் மாகாண சபை முன்னால் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், வேற்பாளர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

4 comments:

  1. இன்ஷா அல்லாஹ் அப்படியேயாகட்டும்

    ReplyDelete
  2. Election commussion should cancel the voting rights of mislims who settled illegally in trincomalee district

    ReplyDelete
  3. Mr. Anusath,

    you don't worry that will take be care by Election Commission

    ReplyDelete

Powered by Blogger.