கடலில் பிடிபட்ட 5 கோடி, பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் (படங்கள்)
-பாறுக் ஷிஹான்-
காங்கேசன்துறை கடற்பரப்பில் சுமார் 5கோடி ரூபா பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுகள் இன்று(17) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை வேளையில் ரோந்து சேவையில் ஈடுபட்ட கடற்படையினர் சந்தேகத்திற்கிடமாக பயணம் செய்த படகு ஒன்றினை சோதனை செய்துள்ளனர்.
இதன் போது படகில் இருந்தவர்கள் முரண்பாடான தகவல்களை தெரிவித்த நிலையில் அவர்கள் பயணம் செய்த படகை சோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சூட்சுமமாக மீன் வலைகளில் மறைக்கப்பட்ட நிலையில் தங்க பிஸ்கட்டுக்கள் மீட்கப்பட்டதாகவும் அதில் பயணம் செய்த இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
Post a Comment