5 ஆண்டுகளே உங்கள் பதவி - உயர்நீதிமன்றம் அதிரடி, ஜனாதிபதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய ஜனாதிபதி பதவியில் ஐந்து வருடங்கள் மட்டுமே இருக்கமுடியுமென, உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
தமது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளா அல்லது ஆறு ஆண்டுகளா என்பதை தெளிவுபடுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் உச்சநீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க தலைமை நீதியரசர் பிரியசாத் டிடப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழு அமைக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது.
இதையடுத்தே, சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் மாத்திரமே என்று உச்சநீதிமன்ற நீதியரசர்களின் அமர்வு ஒருமனதாக முடிவெடுத்துள்ளது.
Post a Comment