ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே, ஆனால் மைத்திரிக்கு இச்சட்டம் அமுல்படுத்தப்படாது
ஐந்தாண்டு பதவிக் கால சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதிக்காது என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய -10- தினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் பூர்த்தியாவது தொடர்பில் உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரியுள்ளார்.
இரண்டாம் தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற காரணத்தினால் இவ்வாறு சட்ட விளக்கம் கோரியுள்ளார்.
19ஆம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
எனினும் இந்த சட்டமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதிக்காது.
2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவே ஜனாதிபதி மைத்திரி தீர்மானித்திருந்தார்.
எனினும் அண்மையில் அவரது பதவிக் காலம் 2021ம் ஆண்டுடன் பூர்த்தியாகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சாதாரண வழமையின் அடிப்படையில் ஜனாதிபதி தமது பதவிக் காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றிடம் விளக்கம் கோரியுள்ளார்.
விடயங்களை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் நோக்கில் இவ்வாறு சட்ட விளக்கம் கோரியுள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
எனினும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்த சட்டம் அமுல்படுத்தப்படாது என்பதே தமது நிலைப்பாடு என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment