Header Ads



டிரம்ப் மன்னிப்பு கேட்க, 55 நாடுகள் வலியுறுத்தல்


அமெரிக்க அதிபர் டிரம்பின் இனவெறி பேச்சுக்கு ஆப்பிரிக்க யூனியனில் உள்ள 55 நாடுகளும் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளது.:

வெளிநாடுகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் அகதிகளாக பலர் குடியேறி வருகின்றனர். அது குறித்த ஆய்வு கூட்டம் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்தது.

செனட் உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்ட இக்கூட்டம் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் நடந்தது. அப்போது ஹைதி மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து அகதிகளாக குடியேறியவர்கள் குறித்து டிரம்ப் பேசினார்.

அப்போது மிகமோசமான அருவருக்க தக்க நாடுகளில் இருந்து வருபவர்களை நாம் ஏன் வரவேற்க வேண்டும். அவர்களால் அமெரிக்க பொருளாதாரம் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றார்.

இதற்கு அவரது குடியரசு கட்சி மற்றும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆப்பிரிக்க யூனியனில் உள்ள 55 நாடுகளும் டிரம்பின் பேச்சுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

டிரம்பின் பேச்சில் இனவெறி தெரிகிறது. அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். எனது பேச்சில் உள்நோக்கம் எதுவும் இல்லை என கூறியுள்ளார்

2 comments:

  1. டிரம்ப் தன்னைப் பற்றித்தான் இங்கு மறைமுகமாகக் கூறியுள்ளார். 

    'மிக மோசமான அருவருக்கத்தக்க நபர்' அமெரிக்காவின் அதிபராக வந்திருப்பது அதன் பொருளாதாரம் மதிப்பு போன்ற எந்த விடயத்துக்கும் உதவப் போவதில்லை என்பதுதான் இதன் பொருள்.

    'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!'

    அமெரிக்கா அதன் அழிவையும் இழிவையும் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.  மாறாக,  கறுப்பினச் சகோதரர்களையும் சகோதரிகளையும் மனிதப் புனிதர்களாக மதிக்கும் இஸ்லாம், உலகை ஆளும் சக்தியாக வேகமாக வளர்ந்து வருகிறது.

    இதுதான் உண்மை.

    ReplyDelete
  2. Another confirmation about his standard of not suitable to be a president. Sham on American people selecting such one as their leader.

    ReplyDelete

Powered by Blogger.