Header Ads



தேர்தல் செலவு 500 கோடி ரூபா, பாராளுமன்றத் தேர்தலைவிட 2 மடங்கு

உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவு பொதுத் தேர்தலுக்கான செலவிலும் இரண்டு மடங்கு எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் திணைக்களத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றது.

பொதுவாக இலங்கையில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 250 கோடி ரூபா செலவாகும் எனினும், புதிய முறையிலான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 500 கோடி ரூபா செலவிடப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4486 இலிருந்து 8346 வரையில் உயர்வடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வாக்குகளை எண்ணும் பணிகளும் வாக்கெடுப்பு நிலையங்களிலேயே நடைபெறவுள்ளதனால் மேலதிக செலவுகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.