தனியார் துறையில் 4 இலட்சம் வெற்றிடங்கள்; ஆய்வில் தகவல்
2017 ஆம் ஆண்டின் தொழில் கேள்வி அளவீடானது தனியார் துறையில் 5,000,000 அளவிலான ஊழியர்கள் பணியாற்றுவதுடன் பல்வேறு துறைகளில் சுமார் 497,302 அளவிலான வெற்றிடங்கள் (கேள்வி) நிலவுவதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் தொழில்கேள்வியை அளவிடுவது என்பது மிகப்பெரிய சவாலாவதுடன் இது நீண்டகால தேவையாகவும் இருந்து வருகின்றது. இத்தேவையை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை புள்ளிவிபரத் திணைக்களம் 2017ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் கணக்கெடுப்பொன்றை நடாத்தியது. இது இலங்கையில் நடாத்தப்பட்ட தொழில் கேள்வி அளவீடு தொடர்பான முதலாவது கணக்கெடுப்பாகும்.
முழு நாடும் உள்ளடக்கப்பட்ட விதத்தில் தெரிவு செய்யப்பட்ட 3,500 நிறுவனம்/நிறுவனங்களில் தரவுகளை திரட்டுதல் இடம் பெற்றது. இதன் மூலம் பெறப்பட்ட முடிவுகள் நாட்டின் தொழிற்துறைத் தகைமை நிகழ்ச்சிகளையும் மற்றும் பல்கலைக்கழக பாடநெறிகளைத் திட்டமிடுவதற்கும் வேலைவாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தொழில் கேள்வி அளவீடு 2017, அறிக்கை பற்றிய ஊடக வெளியீட்டின் போது புள்ளிவிபரத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்த தகவல்களின் படி தற்போது தனியார் துறையில் 5,000,000 அளவிலான ஊழியர்கள் பணியாற்றுவதுடன் பல்வேறு துறைகளில் சுமார் 497,302 அளவிலான வெற்றிடங்கள் (கேள்வி) நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிகளவிலான ஊழியர்கள் சேவைகள் துறையில் காணப்படுவதாகவும் மற்றும் ஊழியர் பிரிவின் படி கணக்கிடுகையில் அதிகமான ஊழியர் சேவைபுரிவது 'சேவைகள் மற்றும் விற்பனை' பிரிவிலாகும்.
அதிகமான கேள்வி காணப்படுவது தையல் இயந்திர இயக்குனரும் (77,189), அதைத் தொடர்ந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு (57,008) அதிகளவிலான கேள்வி உள்ளது. தொழில்வல்லுனர்களின் கேள்வியைக் கருதினால் உயர் கேள்வி நிலவுவது இயந்திர பொறியியல் தொழில்நுட்பவியலாளர், கணக்கியல் தொடர்பான தொழில் வல்லுனர்கள் மற்றும் தாதியர்கள் ஆகும்.
மேலும் இக்கணக்கீட்டின் முடிவுகளின் படி முறைசார் துறையில் அடுத்த 12 மாதங்களுக்குள் சுமார் 74,000 தையல் மற்றும் பின்னல் வேலையில் ஈடுபடுவோரும், ஆடை தயாரிப்பாளர்களும் மற்றும் சுமார் 70,000 வர்த்தக/வியாபார பிரதிநிதிகளையும் தொழிலுக்கமர்த்தவுள்ளதாக தனியார்துறை தொழில்கொள்வொர் தெரிவிக்கின்றனர்.
முறைசார் மற்றும் முறைசாரா துறைகளில் தையல் இயந்திர இயக்குனர்களை தேர்வு செய்து வேலைக்கமர்த்தல் கடினமானதாகவும் உள்ளது. தனியார் துறையில் முதல்முறையாக வேலை பெறுபவரின் வேலை செய்வதற்கான தயார் நிலையை அளவிடும் போது கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை கொண்டவர்கள், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சியை மாத்திரம் பெற்றவர்களை விட உயர்ந்த தயார்நிலை காணப்படுகின்றது.
சிறப்பான ஆய்வு. அதில் உள்ளவைகள் அனைத்தும் உண்மை. இல்லை.முற்றிலும் உண்மை. மஹிந்தவின் தந்திரங்களும் மக்களை ஏமாற்றும் உபாயங்களும் இப்போது சரியாக வேலை செய்யத் தொடங்கியுள்ளன. எவ்வளவு தூரம் செல்லும் எனப் பார்ப்போம்.
ReplyDelete