4 வயது கின்னஸ் சாதனை, சிறுவனுடன் ஜனாதிபதி
நூலொன்றை எழுதி உலகில் இளம் எழுத்தாளராக கின்னஸ் சாதனை படைத்துள்ள சிறுவனான தனுவக்க சேரசிங்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறசேன அவர்களை சந்தித்தார்.
தனது பெற்றோருடன் சீஷெல்சில் வசித்துவரும் இந்த சிறுவன் "Junk Food" என்ற ஆங்கில நூலை எழுதும்போது அவருக்கு வயது நான்கு வருடங்களும் 356 நாட்களும் ஆகும். இந்நூலை அவர் 03 நாள் காலப்பகுதியில் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவனின் திறமையை பாராட்டிய ஜனாதிபதி, பரிசொன்றை வழங்கி வைத்ததுடன் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக தனது ஆசீர்வாதங்களையும் வழங்கினார்.
சீஷெல்சில் உள்ள இலங்கை தூதுவர் டிக்கிரி ஹேரத் குணதிலக்க மற்றும் சிறுவனின் பெற்றோர்களான துஷித்த சேரசிங்க மற்றும் அப்சரா சேரசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Post a Comment