றிசாத் + ஹக்கீம் ஆதரவாளர்கள் மோதல் - 3 பேர் காயம்
வாழைச்சேனை - செம்மண்ணோடை பகுதியில் இரு கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்கக்படப்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
செம்மண்ணோடை பகுதியில் அமைந்துள்ள வடிகாண்களை பிரததேச சபைக்கு சொந்தமான வாகனத்தினை கொண்டு சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர்.
ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஒருவர் குறித்த பகுதிக்கு வருகை தந்ததை தொடர்ந்து இரு தரப்பினருகும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போதே மோதல் ஏற்பட்டத்தாகவும் குறித்த மோதலில் மூவர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment