Header Ads



விமான நிலைய வளாகத்தில், சுற்றித்திரிந்த 35 பேருக்கு அபராதம்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சும்மா சுற்றித் திரிந்த 35 பேருக்கு மினுவங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று (9) அபராதம் விதித்துள்ளது.

மேற்படி அனைவரும் பல சமயங்களில் விமான நிலைய வளாகத்தில் தேவையின்றிச் சுற்றித் திரிந்த குற்றத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணை மூலம் விடுவிக்கப்பட்டவர்கள்.

இவர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணையின் பேரிலேயே இன்று இந்த 35 பேரும் நீதிமன்றில் சமுகமளித்திருந்தனர். அவர்களுக்கு தலா 1,500 ரூபா வீதம் அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதே குற்றத்தின் பேரில், அழைப்பாணை விடுக்கப்பட்டும் நீதிமன்றுக்குச் சமுகமளிக்காத மேலும் ஐந்து பேருக்கு பிடியாணை வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.