Header Ads



முஸ்லிம் சமூகம் 2 பெரும்பான்மை இனங்களால் வெறுக்கப்படும் சமூகமாக மாறியுள்ளது

முஸ்லிம் சமூகம் நாட்டில் உள்ள இரு பெரும்பான்மை இனங்களால் வெறுக்கப்படும் சமூகமாக மாறியுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் நௌஸாத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - மூதூர் பிரதேச சபையில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் மூதூர் நொக்ஸ் வீதி சந்தியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முஸ்லிம் சமூகத்தின் நிலை மாறி இந்த நாட்டில் உள்ள இரண்டு பெரும்பான்மை சமூகத்தினால் வெறுக்கப்படும் சமூகமாக மாறியுள்ளது.

இந்த நிலை எமது சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளினாலேயே உருவாகியுள்ளது. எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அகில மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் செயற்பட்டு வருகின்றார்.

எனினும் தற்போது மற்றைய இனங்கள் நம்மை சந்தேகிக்கும் இனங்களாக வாழ்கின்றோம். அதேபோன்று நாமும் அவர்களை சந்தேகிக்கின்றோம்.

நமக்கும் பரஸ்பர நம்பிக்கை உருவாகாமல் விட்டால் பாதிப்படைவர்கள் முஸ்லிம்கள். எனவே அனைவரும் தட்டிக் கேட்கும் சமூகமாக மாற வேண்டும்.

தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று இல்லாமல் இந்த நாட்டின் பிரஜைகள் சம உரிமையுடன் வாழ வேண்டியவர்கள் என்ற எண்ணம் நம் மத்தியில் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.