ஒரே விஹாரையின் 2 பிக்குகள், இருவேறு கட்சிகளில் போட்டி
ஒரே விஹாரையின் இரண்டு பௌத்த பிக்குகள், இரண்டு கட்சிகளில் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பஹத ஹேவாஹெட்ட பிரதேச சபைக்காக போலப்பே விஹாரையின் இரண்டு பௌத்த பிக்குகள் இரண்டு வெவ்வேறு கட்சிகளில் தேர்தலில் இவ்வாறு போட்டியிடுகின்றனர்.
போலப்பே சுதம்ம தேரர் மற்றும் ஹிந்தகொட ஆனந்த தேரர் ஆகியோர் இவ்வாறு இரண்டு கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.
சுதம்ம தேரர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பிலும், ஹிந்தகொட ஆனந்த தேரர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பிலும் போட்டியிட உள்ளனர்.
சுதம்ம தேரர் ஏற்கனவே பிரதேச சபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment