Header Ads



2020ம் ஆண்டளவில் ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திர கட்சியும் தனித்தனியாக ஆட்சி

பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். 

ஹிம்பிடு​வெல்கொடவில் நடைபெற்ற நிகழ்​வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இதை விட அதிகளவான மோசடிகள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். 

2020ம் ஆண்டளவில் ஐக்கிய தேசிய கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தனித்தனியாக ஆட்சி அமைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.