Header Ads



மொபைல் நிறுவனங்களுக்கு 2017 எப்படி?

-மு.ராஜேஷ்-

புதுப்புது தொழில்நுட்பங்கள், மொபைல்களின் வடிவமைப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் என கடந்த 2017- ல் டிஜிட்டல் உலகில் நிறைய மாற்றங்கள். ஃபுல் வியூ டிஸ்ப்ளே, டூயல் கேமரா, விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் அசிஸ்டென்ட் என வழக்கத்தை விட கடந்த வருடம் பல மடங்கு வேகத்தில் அப்டேட்டானது எல்லா ஸ்மார்ட்போன்களும். அப்படி உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கடந்த வருடம் அடைந்த வளர்ச்சிகளும் சறுக்கல்களும் இதோ.

சாம்சங் மொபைல்

எப்பொழுதும் போலவே உலக அளவில் அதிக மொபைல்களை விற்பனை செய்து கடந்த வருடமும்  முதலிடத்தை தக்க வைத்திருந்தது சாம்சங். இன்ஃபினிட்டி டிஸ்ப்ப்ளே, டூயல் கேமரா என தனது ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பில் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்தது கடந்த வருடத்தில்தான். விர்ச்சுவல் அசிஸ்டென்ட்டான பிக்ஸ்பியையும் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். 

ஆப்பிள்

கடந்த வருடம் மொபைல்கள் விற்பனையில் இரண்டாவது இடம் ஆப்பிளுக்குத்தான். முதல் ஐபோனை அறிமுகப்படுத்தி 10 வது வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்டது ஐபோன் X. ஆப்பிளின் 8,8+ மொபைல்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்காத போது, இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்ட மொபைல் என்றால் அது ஐபோன் X தான். அதற்கு முந்தைய வருடத்தில் 3.5 mm ஆடியோ ஜாக்கை ஐபோனிலிருந்து தூக்கிய ஆப்பிள் கடந்த வருடம் ஃபிங்கர்பிரின்ட் சென்சாரை நீக்கியது. அதற்கு பதிலாக ஃபேஸ் ஐடி என்ற வசதியை கொடுத்தது. வயர்லெஸ் சார்ஜிங், ஃபுல் வியூ டிஸ்ப்ளே என ஏற்கெனவே இருக்கும் வசதிகளை புதிதாக கண்டறிந்தது போல அறிமுகப்படுத்த சற்று மிரண்டுதான் போனார்கள் ஆண்ட்ராய்டுவாசிகள். அதற்கு பதிலாக ஃபேஸ் ஐடி என்ற வசதியை கொடுத்தது. வயர்லெஸ் சார்ஜிங், ஃபுல் வியூ டிஸ்ப்ளே என ஏற்கெனவே இருக்கும் வசதிகளை புதிதாக கண்டறிந்தது போல அறிமுகப்படுத்த சற்று மிரண்டுதான் போனார்கள் ஆண்ட்ராய்டுவாசிகள்.வருடத்தின் கடைசியில், தனது வாடிக்கையளர்களை புதிய மொபைலை வாங்க வைப்பதற்காக பழைய மொபைலின் வேகத்தைக் குறைத்ததாக ஆப்பிள் மீது குற்றச்சாட்டு எழ, அதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டது ஆப்பிள்.

ஹுவாய் 

ஸ்மார்ட்போன் உலகை ஆட்சி செய்ய சீனாவில் இருந்து கிளம்பியிருக்கும் புதிய டிராகன் ஹுவாய். கடந்த வருடம் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது. உலகின் முதல் AI சிப் பொருத்தியா Mate 10 Pro என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி அசத்தியது. இந்தியச் சந்தையிலும் ஒரு கண் வைத்திருக்கும் ஹுவாய் இந்த வருடமும் பிற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதற்கு வாய்ப்புண்டு.   

நோக்கியா

கடந்த வருடத்தில் உலகமே எதிர்பார்த்த நிகழ்வு நோக்கியாவின் ரீ என்ட்ரிதான். எதிர்பார்த்தது போலவே கடந்த வருட தொடக்கத்திலேயே ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி ஆண்ட்ராய்டு உலகத்திற்குள் வந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது என்றாலும் அவை போதுமான வரவேற்பைப் பெறவில்லை. எனவே இந்த வருடம் சந்தையைக் கைப்பற்ற வேறு  திட்டங்களை வைத்திருக்கலாம் நோக்கியா.

ஷியோமி 

இந்திய மொபைல் சந்தையில் கடந்த வருடம் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ ஷியோமி தான். சீனாவில் இருந்து பறந்து வந்த இந்த டிராகன் கடந்த வருடம் அடைந்தது நம்பவே முடியாத வளர்ச்சி. வருட இறுதியில் அதுவரை டாப்பில் இருந்து வந்த  சாம்சங்கையே மிஞ்சும் அளவிற்கு மொபைல்களை விற்பனை செய்திருந்தது. மற்ற நிறுவனங்களைப் போல ப்ளாக்க்ஷிப் மொபைல்களை அறிமுகப்படுத்தாமல் இந்தியர்கள் அதிகம் வாங்க நினைக்கும் பட்ஜெட் மொபைல் செக்மன்டில் அதிக கவனம் செலுத்தியதுதான் ஷியோமியின் வளர்ச்சிக்கு காரணம். அதே ஃபார்முலாவை இந்த வருடமும் கடைபிடிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

சோனி 

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் தனது ஸ்மார்ட்போனில் காட்டினாலும் மொபைலின் வடிவமைப்பை மட்டும் மாற்றுவதற்கு மறுக்கிறது சோனி. அதனாலேயே அதன் விற்பனை சரிந்து கொண்டிருக்கிறது. அதை சற்று தாமதமாகவே உணர்ந்து கொண்ட சோனி தற்பொழுது வடிவமைப்பை மாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே சோனி  இந்த வருடம் மீண்டும் ஒரு ரவுண்டு வரும் என எதிர்பார்க்கலாம். 

மோட்டோரோலா

கூகுள் மோட்டோரோலாவை லெனோவோவிடம் விற்றது அதன் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் பயந்தது போலவே மோட்டோரோலா கடைப்பிடித்த ஒரு சில தனித்துவனமான விஷயங்களை மாற்றியது லெனோவோ. அதற்குப் பிறகு விற்பனை சரியவே சுதாரித்து மீண்டும் பழைய வழிக்கு திரும்பியது. கடந்த வருடம் இதை காப்பாற்றியது பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்தான் என்பதால் அதில் இந்த வருடம் அதிக கவனம் செலுத்தும் மோட்டோரோலா.

No comments

Powered by Blogger.