1800 பேரை தோற்கடித்த, இலங்கை யுவதி
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் மொழி பேச்சுப் போட்டியில் இலங்கை யுவதி ஒருவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
டோக்கியோவில் உள்ள நியோன்சாய் டஹியகு பல்கலைக்கழகத்தில் ஜப்பான் மொழி பேச்சுப் போட்டி வருடாந்தம் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் 2017ஆம் ஆண்டுக்கான பேச்சுப் போட்டி கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றுள்ளது. இதில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 1800 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
இவர்கள் அனைவரையும் தோற்கடித்து இலங்கையைச் சேர்ந்த 25 வயதான ராகமவைச் சேர்ந்த விமுக்தி மாதவி எஹல்பொல என்ற யுவதி முதலிடம் பிடித்துள்ளார்.
இவருடைய வெற்றி தற்போது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளதுடன், முதன்முறையாக இலங்கை யுவதி ஒருவர் ஜப்பான் மொழிப் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவர் கம்பஹா யசோதரா மகளிர் கல்லூரியில் கல்வி கற்றதுடன், களனி பல்கலைக்கழகத்தில் மனித வள மேம்பாட்டு துறையில் பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ளார்.
கடந்த 2 வருடமாக ஜப்பான் பல்கலைக்கழகத்தில் Graphic and animation தொழில்நுட்ப பட்டப்படிப்பினைத் தொடர்ந்தவாரே ஜப்பான் மொழி பேச்சுப் போட்டியில் பங்குப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Congratulations Vimukthi,we wish you a bright future and we wish to hear more and more similar news at this crucial time as our needs very badly to build our image internationally.
ReplyDeleteCongratulations.... wish you all the best and bright future....
ReplyDelete