பஸ்தரிப்பிடத்தில் 17 வயது, பிக்கு துஷ்பிரயோகம்
அனுராதபுரம் பஸ்தரிப்பிடத்தில் இருந்த 17 வயதான பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இவர், அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பிக்குவின் வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, அனுராதபுரம் - கும்பிச்சன்குளம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், 17 வயதான குறித்த பிக்கு குருநாகலில் கல்வி பயின்று வருவதாகவும், கடந்த 5ம் திகதி விடுமுறைக்காக தனது வீட்டுக்கு செல்ல அனுராதபுரம் நோக்கி அவர் பயணித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தகவலளித்த பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன் அனுராதபுரம் நகரில் இருந்து தனது வீட்டுக்கு செல்வதற்காக இரவு 08.00 மணியளவில் பஸ்சுக்காக அவர் காத்திருந்துள்ளார்.
இந்தநிலையில் பொதுக் கழிப்பிடம் எங்குள்ளது என அவர் சந்தேகநபரிடம் வினவிய நிலையில், அவர் பிக்குவை புதிதாக அமைக்கப்பட்டு வரும் (இன்றும் திறக்கப்படாத) பஸ்தரிப்பிடம் நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு யாரும் இல்லாத இடத்தில் வைத்து பிக்குவை சந்தேகநபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முற்றுப் பெறாததால், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடக் கோரி பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.
இதனையடுத்து அவரை விளக்கமறியிலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெறும் பிக்கு எண்று உள்ளது ஆனா? பென்ணா?
ReplyDeleteஆண் - பிக்கு பெண - பிக்குனி
ReplyDeleteசிறுவயதில் பிக்கு ஆக்குவதுவும் சிறுவர் துஷ்பிரயோகம் தானே
ReplyDelete