17 லட்சம் வாக்குகள் எந்தக் கட்சிக்கும், கிடைக்காமல் போகும் நிலை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை என ஒன்றிணைந்த பார்வைத் திறனற்ற பட்டதாரிகளின் சங்கம் அறிவித்துள்ளது. இதன்மூலம், வாக்குரிமை உள்ள மாற்றுத் திறனாளிகள் பதினேழு இலட்சம் பேரின் வாக்குகள் எந்தக் கட்சிக்கும் கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது.
“இலங்கையில் பார்வைத் திறனற்ற பட்டதாரிகள் எழுபது பேர் இருக்கின்றனர். இன்னும் முப்பது பேர் விரைவில் பட்டம் பெறவுள்ளனர். 2013 முதல் எமக்கு வேலைவாய்ப்புத் தருமாறு கோரி வருகிறோம். ஆனால் இதுவரை பதவிக்கு வந்த ஒரு அதிகாரியோ, அரசியல்வாதியோ எங்களில் ஒருவருக்கேனும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை” என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
“இலங்கையில் மாற்றுத் திறனாளிகள் சுமார் பதினேழு இலட்சம் பேர் உள்ளனர். அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் உள்ளூராட்சித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரவுள்ளோம்” எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Post a Comment