17 வயது சிறுவன் கொலை, 16 வயது சிறுவன் கைது
ஹிக்கடுவை - காஸ்லன்ட் தோட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 17 வயது சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த அவர், கவலைக்கிடமான நிலையில், ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே பலியாகியுள்ளார்.
அத்துடன், இவர் ஹெரிஸ்லன்ட் தோட்டம் - கோனபீனுவல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து ஹிக்கடுவை பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment