ஹிஜாப் அணிந்த 11 வயது சிறுமி தாக்கப்பட்டாரா..? வருந்திய பிரதமர் - பொலிசார் மறுப்பு
கனடாவின் டொரண்டோவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்ற 11 வயது சிறுமி தாக்கப்பட்டதாகவும், கத்திரிக்கோலால் அவளது ஹிஜாப் வெட்டப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இதை கனடா நாட்டு அரசியல்வாதிகள் வன்மையாகக் கண்டித்திருந்தனர், இதற்கு கனடா பிரதமரும் மிகவும் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இன வெறுப்புக் குற்றமாகக் கருதிய பொலிசார் விசாரணை மேற்கொண்டனர், இறுதியில் அவ்வாறு ஒரு சம்பவமே நிகழவில்லை என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Toronto District School Board வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதல் உண்மையில் நடைபெறாததற்கு நாங்கள் மிகவும் நன்றி உடையவர்களாயிருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து இதற்கு மேலும் கருத்து தெரிவிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment