Header Ads



10,000 பில்லியன் ரூபா பற்றி, கேள்வியெழுப்பும் பிரதமர்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நிதி சபையின் அனுமதியின்றி 4 ட்ரில்லியன் ரூபாவை பிணை முறிப்பத்திரம் மூலம் ஏலத்தில் விற்பனை செய்ததால், அடுத்த 25 ஆண்டுகளுக்கு 10,000 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலுத்த நேரிட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பான கணக்காய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதால், துரிதமாக அது குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.

பிணை முறிப்பத்திர ஆணைக்குழு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் ஊடகங்கள் தற்போது இந்த 10,000 பில்லியன் ரூபா குறித்து கேள்விகளை எழுப்புமா என தான் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி நாட்டையும் நாட்டின் எதிர்காலத்தையும் அழித்த ராஜபக்சவினர் தற்போது கிராமத்தை கட்டியெழுப்ப அதிகாரத்தை கேட்கின்றனர்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களால் கிராமங்களை எந்த வகையிலும் கட்டியெழுப்ப முடியாது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. Two wrongs don't make a right

    ReplyDelete
  2. Where were you all those years?

    ReplyDelete
  3. Four trillion equal to 4000 billion.So 10.000 billion equal to 10 trillion.So how it is possible to pay 10 trillion for the loan of 4 trillion.Is it your reporting mistake or it is PM mistake to give such a wrong figures.

    ReplyDelete
  4. தன் குற்றத்தை மறைத்து நாட்டு மக்களை மாடாக்கி அனைவரின் வாக்குகளையும் கைப்பற்றக் கையாளும் நன்கு ​ மெருகூட்டப்பட்ட யுக்தி தான் மேலே நீங்கள் வாசித்த செய்தி.

    ReplyDelete
  5. Pls you must force the Gilmaar My3 to do this very soon.
    He forget those because they are all Peramuna gange...
    Also, the News First drumping my3 only....so, they should look these 10,000 billion...too

    ReplyDelete
  6. Yahapalana going to start the game with this matter.MR group people will go to jail as soon.insha allah.yahapalana start to arrest fro there own.

    ReplyDelete

Powered by Blogger.