Header Ads



1000 கிறிஸ்த்தவ பாதிரியார்கள், இஸ்லாத்தை ஏற்ற சம்பவம்


-Hoorulayn Leeza-

ஒரு முறை ஹஜ்ரத். இமாம் ஜாபர் சாதிக் رضي الله عنه  அவர்கள் ஒரு ஊருக்கு போய்க்கொண்டு இருந்த போது,

மாபெரும் கிறிஸ்தவ பாதிரிமார்கள் கூட்டம் நடந்து கொண்டு இருந்ததைப் 
பார்த்து, ஆர்வமிகுதியால் அங்குசென்றார்.

சுமார் ஆயிரம் பாதிரியார்கள்  கலந்துகொண்ட கூட்டம்அது,

முஸ்லிம் ஒருவர் வருவதை உணர்ந்த தலைமை பாதிரி,

இமாம் அவர்களை அழைத்து அவர் முஸ்லிமா என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

பின்னர் அவரிடம் இஸ்லாம் கூறும் சொர்க்கத்தின் அமைப்பில் தனக்கு மூன்று சந்தேகங்கள் இருப்பதாலும் அதனை இமாம் அவர்கள் தீர்த்து வைக்க வேண்டும்என்றும் கேட்டார்.

இமாம் அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.

1)முதல்சந்தேகம்.:-

சொர்க்கத்தில் ஒரு மரம் இருப்பதையும் அதில் அனைத்து சொர்க்கவாசிகளும் எவ்வளவு கனிகளைப் பறித்தாலும் கனிகள் குறைவதே இல்லை என்று உங்கள் மதம் கூறுகிறதே அது நம்பும்படியாகவா இருக்கிறது,,,,,,? அல்லாஹ்வால் முடியம் என்றுகூறாமல், புரியும்படியாக தகுந்த சாத்தியங்களுடன் பதில் கூறுங்கள் என்றார் பாதிரி..!

இமாம்அவர்கள் அமைதியாகக்கூறினார்கள்,

மிக எளிமையான பதில்தான்,,

ஒருமெழுகுவர்த்தியில் எத்தனை மெழுகுவ்ர்த்திகளை ஒளி ஏற்றினாலும் முதல் மெழுகுவர்த்தியில் ஒளி குறைவதில்லையே,,,

பாதிரியார் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்,,,,

2)அடுத்த கேள்வி,,,,,:-

சொர்க்கத்தில் உள்ள சொர்க்கவாசிகள் எதை உண்டாலும் எவ்வளவு உண்டாலும் மலஜலம் கழிப்பதில்லையாமே அதெப்படி சாத்தியம்,,,,,,,

இமாம் அவர்கள் பதிலளித்தார்கள் 

தாயின் வயிற்றிலிருக்கும் சிசுவுக்கும் உணவளிக்கப்படுகிறது அது மலஜலம் கழிக்கிறதா என்ன. உலக உதாரணங்களைக் கொண்டு பதிலளிக்கப்படுவதில்
தலைமை பாதிரிக்கு திருப்தி,,,,, முகத்தில் சந்தோஷம் ,,,,, சரி,,,

3)மூன்றாவது சந்தேகத்தையும் தீர்த்து வையுங்கள்:-

சொர்க்கத்தில் ஒரு சுனை இருக்கிறதாமே,,,, அதில் அறுசுவை நீரும் கிடைக்குமாமே ஒரே சுனையில் அதெப்படி முடியும்,,,

இமாம் சொன்னார்கள்,,,,,

மனிதனின் கண்ணீர் உவர்ப்பு,, உமிழ்நீர் இனிப்பு,,, சிறுநீர் காரம்,,, மலம் வேறு சுவை,,, இதெப்படிஒரே ஒரே உடலில் சாத்தியமோ அப்படித்தான் இதுவும்,,,,

பதில்களைக்கேட்ட அத்தனை பாதிரிகளுக்கும் ஆச்சர்யம், திருப்தி,,, சபையில் ஒரே ஆரவாரம். தலைமை பாதிரி கூறினார்,,,,,

''லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசூலுல்லாஹ்''

அவ்வளவுதான்ஒருவர் பின் ஒருவராக ஆயிரம் பாதிரிகளும் ஈமான்
கொண்டனர்,,,,,,,,

இஸ்லாம் வாளால்  பரவவில்லை,,,,,, இப்படி இமாம்களாலும்,,,,,,,, இறைநேசர்களாலுமே பரவியது,,,,,,,,,,

'''அல்லாஹு அக்பர்'''.

3 comments:

  1. Looks like Sheya story. Beware of Shiya & Yahoody

    ReplyDelete
  2. Information from Wikipedia:

    He was a significant figure in the formulation of Shia doctrine. The traditions recorded from al-Sadiq are said to be more numerous than all hadiths recorded from all other Shia imams combined.[8] As the founder of "Ja'fari jurisprudence", al-Sadiq also elaborated the doctrine of Nass (divinely inspired designation of each imam by the previous imam), and Ismah (the infallibility of the imams), as well as that of Taqiyyah.[9][10]

    ReplyDelete
  3. He was a significant figure in the formulation of Shia doctrine. The traditions recorded from al-Sadiq are said to be more numerous than all hadiths recorded from all other Shia imams combined.[8] As the founder of "Ja'fari jurisprudence", al-Sadiq also elaborated the doctrine of Nass (divinely inspired designation of each imam by the previous imam), and Ismah (the infallibility of the imams), as well as that of Taqiyyah.[9][10]

    ReplyDelete

Powered by Blogger.