பயணத்தை தடுத்து நிறுத்த முயற்சி - UNP குமுறல்
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விசாரணை அறிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், தமது கட்சியின் பயணத்தை தடுத்து நிறுத்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய - கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஊழல், மோசடிகளில் சம்பந்தப்படாத நபர் என்பதை அனைவரும் அறிவார்கள் எனவும் நளின் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் குற்றமற்றவர்கள் எனில் ஏன் பயப்படுகிறீர்கள்...
ReplyDeleteஉங்கள் தலைவர் என்ன வண்டவாளத்தைக் காட்டி எத்தனை மேடைகளில் கத்தினாலும் இந்த நாட்டுமக்கள் யூ.என்.பி. பற்றி ஒரு தீர்மானம் எடுத்துள்ளார்கள். அதை மாற்ற முடியாது அந்த தீர்மானத்துக்கு அடிப்படை மத்தியவங்கியின் பிணைமுறி மோசடி என்பதுதான் உண்மை.
ReplyDelete