Header Ads



CIA யின் கடத்தல்களுக்கு இலங்கை அரசு, உதவுகிறது என பரபரப்பு குற்றச்சாட்டு

அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறையான சீஐஏயின் பல கடத்தல்களுக்கு இலங்கை அரசாங்கம் உதவியளித்ததாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங் எழுதியுள்ள நூல் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கம்மன்பில கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்காவினால் தேடப்பட்ட ரஸ்ய கணினி ஊடுருவலாளர் மனோகின் ரவ்போவிச், இலங்கைக்கு சுற்றுலாவில் வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் விடுவிக்கப்பட்டபோதும் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் புறப்பட்டு சென்றமைக்கான எவ்வித ஆதாரங்களும் இருக்கவில்லை.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் அவர் அமெரிக்காவினால் அழைத்துச் செல்லப்பட்டதாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் எழுதிய நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. He was taken out of Srilanka by private jet owned by Russian Arms businessman who recently visited Srilanka to signed the ship dealing.This dealing is arranged by Maharaja. Even the company, which the ship was bought,is black listed company.Now because of Maharaja and President undiplomatic action America is so and so angry also with It's embassy staff who did nothing to prevent this.This Maharaja is playing with Srilanka's politics earning the wreath of America and international community.

    Now Maharaja,Arjun Mahendran and Allosius become a big problem for Srilanka.It shows how foolish are this Srilankan politicians who are easily taken for granted.


    What is strange is that Udaya Gammanpila do not know what is happening inside Srilanka.This is another evidence to show what I mentioned above about this politicians. Srilankan politicians are not intelligent but crafty.They know nothing how to develop a country but only to steal. that's what on of the best country is suffering badly.

    ReplyDelete

Powered by Blogger.