உள்ளுராட்சி தேர்தலில், இதுதான் நடக்கும் (மிகத் தெளிவான விளக்கம்)
கலப்பு முறை என்டா என்ன? அது எப்டி கணக்கு பாக்குற?
இந்த பொம்புளகளும் கட்டாயம் போகனுமாமே! அதுர வெளக்கம் என்ன?
இதெல்லாம் நமக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கனும் புள்ளைகாள். இல்லாட்டி இவனுகள் நம்முட தலையில தேங்கா ஒடச்சிட்டு போய்டுவானுகள்.
இதுல ஒரு சீன வித்தையும் இல்ல. சிம்பிளா வெளங்கி எடுக்கலாம்!
இப்ப உதாரணத்துக்கு ஒரு ஊரை எடுப்பம்.
அதுல ஒரு 12 வட்டாரம் பிரிச்சிருக்கு என்டு எடுத்துகொள்ளுங்க.
இப்ப இந்த கலப்பு முறையில எப்டி வரும் என்டால்,
முதல்ல வட்டாரம் எல்லாம் கூட்டி 60 சதவீதமாக கணக்கெடுப்பாங்க; பிறகு அதோட சேர்த்து விகிதாசர முறையிலும் 40 சதவீதம் தெரிவு செய்வாங்க.
அதாவது நம்மட பாசையில சொல்ல போனால், 12 வட்டாரத்துக்கும் 12 பேர்; அதோட சேர்த்து போனஸா 8 பேர்!
அப்ப மொத்தம் 20 பேர் சபைக்கு போவாங்க!!
சரியோ அவ்ளோதான் கணக்கு!
இப்ப தேர்தல் நடக்குது.
ஒவ்வொரு வட்டாரத்துலையும் ஒவ்வொரு கட்சியும் ஆக்கள் போடும். நம்ம விரும்புற கட்சிக்கு வோட்டு போடுவம். இப்ப அதுல எந்த கட்சி அதிகமாக வோட்டு எடுக்குதோ அந்த கட்சி அந்த வட்டாரத்துல வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அப்ப அந்த 12 பேரையும் தெரிவுசெய்து முடிஞ்சி!
சரி இப்ப மற்ற 8 ஆசனங்களும் எப்டி தெரிவு செய்வாங்க?
எல்லா வட்டாரத்துலையும் எல்லா கட்சிகளும் எடுத்த மொத்த வோட்டுகளை கூட்டுவாங்க. அதாவது ஊர்ல அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளை கூட்டுவாங்க.
உதாரணத்துக்கு அப்டி கூட்டி ஒரு 15,000 வோட்டுகள் வருது என்டு எடுத்துக்கோங்க!
இப்ப அந்த 15,000 வோட்டையும் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையான 20 ஆல பிரிப்பாங்க. அப்டி பிரிச்சா 750 வரும்.
இப்ப அந்த 750 வோட்டுத்தான் ஒரு ஆசனம் கிடைப்பதற்கான ஆகக்குறைஞ்ச வோட்டு!
இப்ப என்ன செய்வாங்க என்டா,
ஒவ்வொரு கட்சியும் எல்லா வட்டாரங்களையும் சேத்து மொத்தமா எத்துன எத்துன வோட்டு எடுத்திருக்கு என்டு பாப்பாங்க.
உதாரணத்துக்கு UNP எடுப்பம். அந்த கட்சி எல்லா வட்டாரங்களையும் சேர்த்து ஒரு 6000 வோட்டு எடுத்திருக்கு என்டு வெச்சிக்கொள்வோம்.
இப்ப இந்த 6000 வோட்டுக்கும் எத்துன ஆசனம் கிடைக்கும் என்டு கணக்கு பாப்பாங்க. அப்படி என்டால், இந்த 6000 ஐயும் 750 ஆல பிரிப்பாங்க. அப்டி பிரிச்சா 8 வரும். அதுட அர்த்தம் என்ன என்டால் UNP க்கு மொத்தம் 8 ஆசனங்கள் போய்ச் சேரனும்.
இப்ப UNP எத்துன வட்டாரத்துல வெற்றி பெற்றிருக்கு என்டு பாப்பாங்க. உதாரணத்துக்கு அவங்க 5 வட்டாரத்துல வெற்றி பெற்றிருந்தால், அந்த ஐந்தையும் கழித்துவிட்டு அவங்களுக்கு போய் சேர வேண்டிய மிச்சம் 3 ஆசனங்களும் அந்த போனஸ் லிஸ்டுல இருந்து வழங்கப்படும்.
அதோட கேம் ஒவர்!
இன்னம் ஒரு உதாரணமும் சொல்லனும்.
இப்ப ஒரு சுயேட்சை குழு எலக்சன்ல நிக்கிது என்டு வெச்சிகோங்க. இப்ப அவங்க ஒரு வட்டாரத்துலயும் வெத்தி பெறல்ல என்டு எடுப்பம்.
ஆனால், எல்லா வட்டாரங்கலைளையும் சேத்து அவங்களுக்கு ஒரு 800 வோட்டு கிடைச்சிருக்கு என்டு எடுத்தால், அவங்களுக்கும் போனஸ் லிஸ்டுல இருந்து ஒரு ஆசனம் வழங்கப்படும். ஏன் என்டால் அவங்க ஒரு ஆசனத்துக்கான ஆகக்குறைஞ்ச வோட்டு எண்ணிக்கையான 750 எடுத்திருக்காங்க!!
ஆகவே இதுல எல்லா கட்சிகளுக்கும் எல்லா வகையிலையும் வெற்றி பெறலாம். ஒரு கட்சிக்கு ஒரு வட்டாரத்துல மட்டும்தான் வாக்கு இருந்தாலும் ஆசனம் கிடைக்கும் வாய்ப்பிருக்கு. அப்டி இல்லாம ஊருக்குள்ள பரவலாக வாக்குகள் இருந்தாலும் ஆசனம் கிடைக்கும் வாய்ப்பிருக்கு.
இதுல லிஸ்டு போட்றத்துல இன்னொரு விசியமும் இருக்கி. அது என்ன என்டால்,
இப்ப ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் ஒவ்வொரு ஆள் நியமக்கப்பட்டு ஒரு லிஸ்டு போடுவாங்க தானே?
அதுக்கு மோலதிகமாக இன்னுமொரு போனஸ் லிஸ்டும் நிரப்பி கொடுக்கப்படும். அதாவது எங்களுக்கு போனஸ் ஆசனம் கிடைக்கும் பட்சத்தில் நாங்க இதுல இருந்து ஆக்கள் நியமிப்போம் என்டு கொடுப்பாங்க. ஆனா அதுல சுவாரஷ்யம் என்ன என்டால், கட்டாயம் அந்த லிஸ்டுல இருந்து தான் போனஸ் ஆசனத்துக்கு ஆக்கள் போடனும் என்டு கட்டாயம் இல்ல. வட்டாரத்துல தோல்வியடைந்த ஆக்களையும் போடலாம்.
சரியோ அவ்வளோவும்தான் விசியம்.
பொம்புள ஆசனங்கள் தொடர்பான வெளக்கம் என்ன?
கட்டாயம் 25 சதவீதம் சபைக்கு பெண்கள் நியமிக்கப்படவேணும் என்டு சொல்றாங்களே அப்டி பாத்தா அந்த 20ஆசனங்களில் 5 ஆசனங்கள் பொம்பளைகளா இருக்கனுமா? அப்டின்னு நீங்க யோசிக்கிறது நியாயம்.
ஆனால், இதை பத்தி எல்லா கட்சிகளும் பயப்பட தேவல்ல மக்காள்.
ஏன் என்டால், 3 ஆசனங்களுக்கு மேலதிகமாகவும் மொத்த வாக்குகளில் 20% ஆன வாக்குகளுக்கு மேலதிகமாகவும் பெறுகின்ற கட்சிகள் மட்டும்தான் அந்த கணக்குக்குள் உள்வாங்கப்படுவார்கள்.
ஆகவே அந்த லிஸ்டுக்குள்ள வாற கட்சிகளில் பெண்கள் வெற்றி பெறாத பட்சத்தில், அவர்களின் போனஸ் லிஸ்டிருந்து கட்டாயம் பெண்கள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
சில நேரங்களில் பெண்கள் எண்ணிக்கை 25%ஐ விட குறையவும் வாய்ப்பிருக்கு. கட்சிகள் எடுக்கன்ற ஆசனங்களின் நிலைப்பாட்டை பொறுத்து தேர்தல் ஆணையகம் அதனை அனுமதிக்கும்.
-vtm imrath-
நல்லா சொனனீ ங்க போங்க
ReplyDeleteஎல்லாம் திருகு தாளம் போடும் வேலைதான் எது எப்படியோ நம்ம ஆட்கள் ஒன்றுபடும் நோக்கம் தென்படவில்லை
ReplyDelete