வீரவங்சவின் சகாக்களுக்கு, அரசாங்க பதவிகள்
தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய பிரியன்ஜித் விதாரண வெளிநாட்டு தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியை கைவிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பியசிறி விஜேநாயக்கவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படும் என தெரியவருகிறது.
மேலும் தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவராக பதவி வகித்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க பிரதியமைச்சராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
வீரகுமார, உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சராக நியமிக்கப்படலாம் என பேசப்படுகிறது.
வீரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளர் பதவியை கோரியிருந்தாகவும் இதுவரை அமைப்பாளர் பதவி கிடைக்காத காரணத்தினால், அவர் கவலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு நாட்டின் தலைவர் என்ற நிலைப்பாட்டிலிருந்து அவர் வெகுதூரம் விலகிச் செல்வது போல் தெரிகிறது. இந்த போக்கு அவருடைய வாக்குவங்கிக்கு சார்பாக அமையும் போல் வௌியில் தெரிந்தாலும் அது நீண்டகால அடிப்படையில் அவருடைய கட்சிக்கு நிச்சியம் சார்பாக அமையமாட்டாது.
ReplyDelete