அரசியலில் மாற்றத்தை, ஏற்படுத்தப்போகும் அறிக்கை
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை இன்று அல்லது நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
அதிபர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அச்சிடப்பட்டு வரும் நிலையில், இந்த அறிக்கை இன்று அல்லது நாளை சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படும் என்று, ஆணைக்குழுவின் செயலர் சுமதிபால உடுகமசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 27ஆம் நாள் இந்த ஆணைக்குழு சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் விசாரணைகள் ஒக்ரோபர் 27ஆம் நாளுடன் முடிவடையவிருந்த நிலையில், பல்வேறு தரப்புகளின் கோரிக்கைகளை அடுத்து, அதன் விசாரணைகள் நீடிக்கப்பட்டன.
120 நாட்கள், 65 சாட்சிகளிடம் இருந்து ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளது,
நாளையுடன் ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையிலேயே அதன் இறுதி அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கை சிறிலங்கா அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Post a Comment