அஜித் பெரேராவின் பதிலடி
அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்லாது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொறுப்புக்கூற வேண்டும் என பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார முடிவுகளை ஐக்கிய தேசியக் கட்சி எடுப்பதாகவும், அவை கடும் தோல்வி தன்மையை கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதியமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களையும் அமைச்சரவையே எடுக்கின்றது. அந்தவகையில் அமைச்சரவையின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
அமைச்சரவையில் எடுக்கப்படும் கூட்டு தீர்மானங்களே நாட்டில் அமுல்படுத்தப்படுகின்றன. நாட்டை ஆட்சி செய்வது ஐக்கிய தேசியக் கட்சிதான்.
இது யதார்த்தமானது. தீர்மானங்கள் வெற்றியளிக்கும் போது எமது என்பார்கள். தவறும் போது தம்முடையதல்ல என்பார்கள் என அஜித் பீ.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment