இலங்கை அரசியல்வாதிகளின், சொத்துக்கள் டுபாயில்
வெளிநாடுகளில் உள்ள சில சொத்துக்கள் இலங்கை வம்சாவளி அரசியல்வாதிகளால் சட்ட விரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சொத்துக்கள் தற்காலிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையின் சட்டத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது
குறித்த சொத்துக்களை மறைத்துவைத்துள்ள இலங்கையர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்ற அடிப்படையில் தற்போது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகன்றன.
லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு, நிதிமோசடிகளுக்கு எதிரான காவல்துறை உட்பட்ட தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இந்த சொத்துக்கள் ஐக்கிய அரபு ராச்சியத்தில் மறைத்து பேணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் இந்த தகவல்களை வெளியிட்ட சட்டத்துறை அதிகாரிகள் யார் இந்த குற்றச்செயலுக்கு பொறுப்பானவர்கள் என்ற தகவலை வெளியிடவில்லை.
இந்தநிலையில் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு காலம் தாமதம் ஆகும் என்ற போதிலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
அத்துடன் அவர்களின் சொத்துக்களையும் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment