வீட்டுக்குள் புகுந்த பிக்கு, ஆசிரியையை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சி - தேர்தலிலும் போட்டி
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ பிரதேசசபைக்கு லக்கல தேர்தல் தொகுதியில் போட்டியிடும் பௌத்த பிக்கு ஒருவர், ஆசிரியையின் வீட்டுக்குள் புகுந்து அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த போது சிக்கியுள்ளார்.
சோனுத்த விகாரையின் விகாராதிபதியான ரத்தனபால தேரர் என்ற பிக்குவே இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஆசிரியையின் கணவர் சில காலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதுடன் அவரது வீடு விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.
சம்பவம் நடந்த தினத்தில் அதிகாலை 5.30 மணி அளவில், இந்த பிக்கு யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் புகுந்துள்ளார்.
இப்படியான நபருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியமை குறித்து பொதுஜன முன்னணிக்கு மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
கள்ளன் காவாலி தெருப்பொறுக்கி முள்ளமாறி பொறம்போக்கு குடிகாரன் கொந்தராத்து ஊழல்வாதி இனவாதி இவ்வாறு நீண்ட தகமைகள் கொண்டவர்கள் தான் இந்த முறை வேட்பாளர்கள்(NFGG and JVP தவிர)
ReplyDelete