Header Ads



சவூதியின் சீர்திருத்தம் யாரை? எப்படி? எதுவரை? திருப்திப்படுத்தும்..?


சீர்திருத்தம் ..!

இது  எதுவரை செல்ல முடியும் ...?
திருப்தியே  காண முடியாத மனிதனுக்கு மனிதன் இது வேறுபட்டாலும் சீர்திருத்தம் என்பதற்கு முடிவே கிடைக்காது .

மேற்கின் சீர்திருத்தம் என்பதும் கிழக்கின் சீர்திருத்தம் என்பதும் வெவ்வேறு எண்ணக்கருக்கள் .

சரி விடயத்துக்கு வருவோம் ..

தமது சுய இலாபங்களுக்காக
கிருஸ்தவத்துக்குள் சீர்திருத்தம் வரவேண்டும் என்று கிருஸ்தவ மதத்துக்குள்ளேயே
புரட்டஸ்தாந்த்தை உருவாக்கிய  மேற்கில் ,
சீர்திருத்தம் என்பது தமது சுய திருப்தியை மையமாக கொண்டது என்பதை   வரலாறு படங்காட்டி நிற்கிறது .

ஜனநாயகம் ,மனித உரிமை ,பெண்ணுரிமை , ஓரின பால் உரிமை ,வாக்குரிமை , சம உரிமை ,என்கிற அடையாளங்கள் மேற்கின் பெறுமதிகளாக உலகத்துக்கு அடையாளம் காட்டப்படுவதுடன் அவை மதங்களோடு அல்லது  கலாச்சாரங்களோடு  முரண்படுகிற போது அவற்றை திணிப்பதற்க்காக மேற்குலகம் யுத்தம் வரை சென்றுள்ளன .


இஸ்லாத்துக்குள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்கிற  குளறல் இன்று நேற்று ஆரம்பமானது அல்ல.

குறைஷியர்களே நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களுக்கு பல  சீர்திருத்த யோசனைகளை முன்வைத்தமை வரலாற்றில் காணக்கிடைக்கிறது

இஸ்லாத்துக்குள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்கிற   மேற்கின் அவா சிலுவை யுத்தம் தொடக்கம் கனவாக இருந்து வந்தது .காலனித்துவ காலத்திலும்  இவை முயற்சிக்கப்பட்டன எனினும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

எனினும் இஸ்லாத்தில் வன்மையாக கண்டிக்கப்பட்டுள்ள தேசிய வாதத்தை உருவாக்கி அவர்களை மார்க்கத்தில் இருந்து முஸ்லீம்களை பிரிப்பதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் கண்டார்கள் .

இன்றும் மார்க்கத்தை மிக இலகுவாக்கி ,அடிப்படை கோட்பாடுகளை மாற்ற முயற்சிக்கிற மார்க்க அறிஞர்கள் மற்றும்  இமாம்கள் தட்டிக்கொடுக்கப்படுகிற
அதேவேளை உண்மையை உண்மையாக சொல்கிற மார்க்க அறிஞர்கள் விஸாக்கள்  மறுக்கப்படுகிறார்கள்  ;சிறைப்படுத்தப்படுகிறார்கள்   ;பயங்கர வாதிகளாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள் ; கொல்லப்படுகிறார்கள்

அமெரிக்க அரசாங்கத்துக்கு கொள்கை பரிந்துரை ஆலோசனை வழங்குகிற ராண்ட் (Rand) என்கிற அமைப்பை சேர்ந்த யூத பெண்மணி ஷெரில் பேர்னார்ட் , இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என்கிற அதே தொணியில் ஜனநாயகத்தின் ஐந்து தூண்கள் என்கிற பெயரில் 2004 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த ஆலோசனை கட்டுரையில் கூறிய பரிந்துரைகளில் சில இதோ.


*1.இஸ்லாத்துக்குள் சீர்திருத்தம் செய்ய வேண்டும்*

*2.அந்த சீர்திருத்தத்தை மார்க்க போதனைகளில் போதிக்கின்ற இமாம்கள் நிதி நீதியாக தட்டிக்கொடுக்கப்பட  வேண்டும்* .



*3.அவர்களின் நூல் வெளியீடுகள் பிரசுரங்களுக்கான செலவுகள் ஏற்கப்பட வேண்டும்*

*4.சீர்திருத்த வாதிகளுக்கு பிரமாண்டமான இளவயது விசிறி வட்டங்கள் உருவாக்கப்பட உதவி செய்தல்.*

*5.இஸ்லாமிய சீர்திருத்த வாதிகளின் கொள்கைகள் இஸ்லாமிய பாடத்திட்டங்களில் உள்ளடங்கப்படல் வேண்டும்*


*6.அடிப்படை வாதிகளினதும் மரபு வாதிகளினதும் போக்குகளுக்கு எதிராக சீர்திருத்த வாதிகளின் இஸ்லாமிய மார்க்க* *கருத்துக்கள் ,தீர்ப்புக்கள் போன்றன , பாடசாலைகள் வீடுகள் ,கல்வி நிறுவகங்கள்* *ஆகியவற்றில் பெருவாரியாக பரப்பப்படல் வேண்டும் .*


*7.இளைஞர்களுக்கு மேலை நாகரிகம் ,மதவாதம் இல்லாத தன்மை ஆகியன போதிக்கப்பட வேண்டும் .*


*8.இஸ்லாத்துக்கு முற்பட்ட காலம் பற்றியும்  இஸ்லாம் அல்லாத நாடுகளின் வரலாறுகள் கலாசாரங்கள் ஆகியன பற்றியும் ஊடகங்கள் மூலமாகவும் பாடசாலை கல்வி திட்டங்கள் மூலமும் முஸ்லிம் நாடுகளிலும் , முஸ்லீம்களுக்கும் கற்பிக்கப்படல் வேண்டும்.*


ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளதா...?

ஆம், இஸ்லாத்தை சீர்திருத்த முதலைக்கண்ணீர் வடிக்கிற அந்த கூட்டம் இப்போது முஸ்லீம் நாடுகளின் ஆட்சியாளர்களை தம் பக்கம் இழுத்து  தமது இலக்குகளை அடைய முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்

அந்த அடிப்படையிலேயே சவூதி அரேபியாவிலும் இப்போது சீர்திருத்தப்பணிகள் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் ஸல்மான் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . பெண்கள் வாகனம் ஒட்ட அனுமதித்தமை ;சினிமாக்களை ஆரம்பிக்க அனுமதித்தமை ; லாஸ் வேகஸ் போன்ற களியாட்ட நகரங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளமை ;மேற்கு சார்பான  பொருளாதார சீர்திருத்தங்களை திட்டமிட்டுள்ளமை ;மார்க்க அறிஞர்கள் பலர் கைது செய்யப்பட்டமை ; மார்க்கத்தை சீர்திருத்தி இலகு படுத்துகின்றமை
என்று தொடர்கிறது அவரது  'சீர்திருத்த' பட்டியல் .

அவரின் சீர்திருத்த முயற்சிகளை பலமாக வரவேற்றுள்ள மேற்குலகம் "மேலும் ..மேலும்.. சீர்திருத்தம்.." என்று விசிலடித்து அவரை  உசுப்பேத்திக்கொண்டு இருக்கிறது .

இஸ்லாமிய சீர்திருத்த வாதிகளின் இந்த சீர்திருத்த பணிகளுக்கு முஸ்லீம் அல்லாதோர் எப்போது திருப்தி காணுவார்கள் ..?

படைத்தவன்  அளவற்ற அருளாளன் அல்லாஹ் தனது அல்குர் ஆன் திருமறையில் இதற்குரிய பதிலை அழகாக தருகிறான்


*(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (அல்குர்ஆன் : 2:120)*


இந்த மார்க்க சீர்திருத்த வாதிகளின் பசுந்தோல் போர்த்திய வேசங்களில் நாமும் நமது சந்ததியினரும்  இளைய சமூகமும் சிக்கி   விடாமல் அல்லாஹ் நம்மை பாது காப்பானாக !

*-"அய்யாஷ் "*

4 comments:

  1. Timely Article An Eye Opening one.
    Zionist Conspiracy behind Riyad'S much publicised reforms, Make No Mistake ,to b doomed.

    Since Qulafaee Rashideen numerous plots were hatched n staged bt Allah SWA fortified Dheen with resilience n fortitude . Let's all strive towards this Noble goal with our QiyamulLail not forgetting Fajr Salah in Jamaath!
    Think globally Act locally .Inshallah.

    ReplyDelete
  2. Oh Allah accept our prayer.

    ReplyDelete
  3. Unless... A Muslim or a Muslim State will place Quran and Sunnah as the Guidance and Limit for their REFORMS,,, they will be in destruction.

    We Ask Allah to make our people and leaders limit their thirst withing the guidance and limits of Quran and Saheeh Sunnah.

    ReplyDelete
  4. As long as these people are in power . There is no freedom for Muslim world.. Let us pray Allah that these dictators are crushed and replaced with good people with piety and sincerity.. These jewish people in the name of Islam and what Islam they have.. While millions of children are being killed and starved to death..they have done nothing ..bleeding to death and yet, they do not care..

    ReplyDelete

Powered by Blogger.