மகிந்தவுக்கு முடியாதென்றால் கோட்டபாய
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் போட்டியிட முடியாதாயின், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவித்தார்.
நாட்டை சீர்குலைத்ததை போன்று கிராமத்தையும் சீர்குலைக்க வரம் தருமாறு தற்போது கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
மகிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஒரு முறை தேர்தலில் போட்டியிட முடியாது என இவர்கள் சந்தோசமாக கூறுகின்றனர்.
மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, இவர்கள் முட்டுக்கட்டை இடுவார்களாயின், யுத்தத்தை வெற்றி கொள்ள உந்துசக்தியாக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ முன்னிறுத்தப்படுவார் என ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் போது நிறைவேற்று பிரதமராக மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார்.
மகிந்த, கோட்டாபய யுகம் ஒன்று இந்த நாட்டில் ஏற்படுத்தப்படும் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டார்.
Post a Comment