"அடுத்த வருடம் ஆட்சியைக், கைப்பற்றியே தீருவோம்"
“நல்ல முறையலோ தீய முறையிலாவது சரி அடுத்த வருடம் ஆட்சியைக் கைப்பற்றியே தீருவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (30) பட்டபொலயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து தேர்தலுக்கு செல்ல மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அதிகாரத்துக்கு, பணத்துக்கு ஆசைப்பட்டு எம்மை கஸ்டத்தில் விட்டுச் சென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் ஒன்றிணைந்த கூட்டணியுடன் இணைந்து இம்முறை தேர்தலுக்கு வருமாறு கலந்துரையாடினர். நான் அதற்கு பூரண எதிர்ப்பை வெளியிட்டேன். நாம் தனியாக போட்டியிடுவோம் என மஹிந்தவிடம் தெரிவித்தேன்“ என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைவதற்கு தானும், நாமலும் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும், ஸ்ரீலங்கா சுதந்தரக்கட்சியின் பிளவுக்கு சிறிசேனவே காரணம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment