Header Ads



நண்பனை நிர்வாணமாக படமெடுத்த, மாணவர்கள் கைது

ஸ்மார்ட் போன் ஊடாக நண்பனை நிர்வாணமாக படமெடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் பிரதேசத்தில் உள்ள பாடசாலையின் மாணவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன

No comments

Powered by Blogger.